உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆழ்வார்குறிச்சி அக்னி தீர்த்தக்கரையில் 28ம் தேதி நவசண்டி ஹோமம் துவக்கம்

ஆழ்வார்குறிச்சி அக்னி தீர்த்தக்கரையில் 28ம் தேதி நவசண்டி ஹோமம் துவக்கம்

ஆழ்வார்குறிச்சி:ஆழ்வார்குறிச்சி அக்னி தீர்த்தக்கரையில் அம்பா யாகம், மஹா நவசண்டி ஹோமம் வரும் 28ம் தேதி துவங்கி 9 நாட்கள் நடக்கிறது.ஆழ்வார்குறிச்சியிலிருந்து பாப்பான்குளம் செல்லும் சாலையில் ராமநதியின் வடகரையில் சுப்பிரமணியர்-அக்னீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சப்தரிஷிகளின் சாபத்திற்கு அஞ்சிய அக்னி பகவான் சாப நிவர்த்திக்காக ராமநதியின் வடகரையில் ஒரு தீர்த்தம் அமைத்து மீன் உருவம் கொண்டு நீண்ட நாட்களாக அங்கேயே ஒரு லிங்கத்தையும் ஸ்தாபித்து தவம் செய்து வந்தார். அக்னி பகவானின் தவத்தையும், வலிமையையும் உணர்ந்து ஈசன் மீண்டும் ஒளியை அளித்து சக்தியை வழங்கிய இடம் அக்னிதீர்த்தக்கரை ஆகும்.சுமார் 100 ஆண்டுகளாக பராமரிக்கப்படாத இந்த அக்னிதீர்த்தகரையை பாலசுப்பிரமணியசுவாமி கோயில் டிரஸ்ட் மற்றும் உழவார பணியினர் சீரமைத்து பல்வேறு விழாக்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இங்கு வரும் 28ம் தேதி அம்பா யாகம் மற்றும் நவசண்டி ஹோமம் துவங்குகிறது. அன்று காலை 4 மணிக்கு அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம், பிரசுத்த ஹோமம், மகா நவசண்டி ஹோமம், மாலை 4.30 மணிக்கு பகவதி சேவை, விசேஷ பூஜை, அலங்கார தீபாராதனை, லலிதாசஹஸ்ரநாம ஜெபம், அத்தாழ பூஜை நடக்கிறது.ஒன்பது நாட்களும் பல்வேறு ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !