அன்னூர் நாககன்னியம்மன் கும்பாபிேஷகம்
ADDED :2578 days ago
அன்னூர்:வடக்கலூர் நாககன்னியம்மன் கோவிலில், புதிதாக கர்ப்பகிரகம், கோபுரம் அமைக்கப் பட்டு, பால கணபதி, பால முருகன், நாக கன்னியம்மன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று முன்தினம் (அக்., 28ல்) மாலை விநாயகர் வழிபாடுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இரவு, முதற்கால வேள்வி பூஜையுடன், கோபுர கலசம் வைக்கப்பட்டது.
நேற்று (அக்., 29ல்) அதிகாலை, இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய குடங்கள் கொண்டு வரப்பட்டு, காலை, 7:30 மணிக்கு கோபுரம் மற்றும் பால கணபதி, பாலமுருகன், மூலஸ்தான அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின் மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.