ராதா கல்யாண மகோற்சவம்
ADDED :4994 days ago
கடலூர்:கடலூர் புதுப்பாளையம் ராதா கிருஷ்ண பக்த பஜனை மண்டலி சார்பில் வரும் 19ம் தேதி ராதா கல்யாண மகோற்சவம் நடக்கிறது. கடலூர் புதுப்பாளையம் ராதா கிருஷண பக்த பஜனை மண்டலி சார்பில் 26ம் ஆண்டு ஸ்ரீராதா கல்யாண மகோற்சவம் வரும் 19ம் தேதி கடலூர் புதுப்பாளையம் எம்.வி. பி., சொக்கலிங்கம் செட்டியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதனையொட்டி (18ம் தேதி) காலை 8 மணிக்கு கணபதி பூஜையும், 9 மணிக்கு அஷ்டபதி பஜனையும், இரவு 7 மணிக்கு ஜானவாசம், நிச்சயதார்த்தமும், இரவு 8 மணிக்கு கடையநல்லூர் ராஜகோபால் பாகவதர் குழுவினரின் பஜனை நடக்கிறது. மறுநாள் 19ம் தேதி காலை 7 மணிக்கு உற்சவிருத்தி, காலை 10.30 மணிக்கு ராஜகோபால் பாகவதர் குழுவினரின் ஸ்ரீராதா கல்யாண வைபவம் நடக்கிறது. காலை 12 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவம் நடக்கிறது.