ரிஷிவந்தியத்தில் பிரதோஷ விழா
ADDED :4994 days ago
ரிஷிவந்தியம்:ரிஷிவந்தியம் அர்த்நாரீஸ்வரர் கோவிலில் பிரதோஷவிழா நடந்தது.பிரதோஷவிழாவை முன்னிட்டு கோவில் பலிபீடம் அருகே உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடுகள் நடந்தது. உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்டு நந்தி வாகனத்தில் வைத்து பக்தர்கள் தோளில் சுமந்து கோவிலை வலம் வந்தனர். பின்னர் நடந்த மகா தீபாராதனையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.பிரதோஷ வழிபாட்டு முறைபடி கோவிலை வலம் வந்து கோமுகம் அருகில் உள்ள சண்டிகேஸ்வரரை வணங்கிய, பக்தர்கள் கோவிலை வலம் வந்தனர். சிறப்பு பூஜைகளை நாகராஜ், சோமு குருக்கள் செய்தனர்.