ஊட்டி ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை
ADDED :2592 days ago
ஊட்டி:ஊட்டி அருகே கீழ் அப்புகோடு ஆனந்தமலை முருகன் கோவிலில் நடந்த கிருத்திகை பூஜையில், சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த முருக பெருமானுக்கு அபிஷேகம், சிறப்பு
பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர். ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் ராமசந்திரன் செய்திருந்தார்.