உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோவில் உண்டியல் வசூல் உயர்வு

நெல்லையப்பர் கோவில் உண்டியல் வசூல் உயர்வு

திருநெல்வேலி:தாமிரபரணி புஷ்கர விழாவினால், நெல்லையப்பர் கோவில் உண்டியல் வருமானம், வழக்கத்தை விட, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவிலில் வழக்கமாக, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கோவில் உண்டியல்கள் எண்ணப்படும். சமீபத்தில் புஷ்கர விழா நடந்து முடிந்ததையொட்டி, நேற்று உண்டியல்கள் எண்ணப்பட்டன. இதில், 11.72 லட்சம் ரூபாய் ரொக்கம், 9 கிராம் தங்கம், 105 கிராம் வெள்ளிப்பொருட்கள் இருந்தன.வழக்கமாக, இரண்டு மாதங்களில் உண்டியல் வசூல், 8 லட்சம் ரூபாய் மட்டுமே இருக்கும். ஆனால், 22 நாட்களில், 11.72 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !