உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா

உத்தரகோசமங்கை முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா

உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை தெற்குத் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் அக்.,21ல் காப்பு கட்டுதலுடன் முளைப்பாரி விழா துவங்கியது. நாள்தோறும் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகளும், இரவில் கோலாட்டம், கும்மி, ஒயிலாட்டம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயில் முன்பு முளைப்பாரிகள் இறக்கப்பட்டு,  உலக நன்மைக்கான சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள் அம்மன்
பாடல்களைப் பாடினர். பின்னர் சீதைப்புனல் ஊரணியில் முளைப்பாரிகள் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !