மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பூதத்தாழ்வார் அவதார உற்சவம்
ADDED :2857 days ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பூதத்தாழ்வார் அவதார உற்சவம், வரும், 7 - 16ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பன்னிரண்டு ஆழ்வார்களில் குறிப்பிடத்தக்கவர் பூதத்தாழ்வார். ஐப்பசி அவிட்ட நட்சத்திர நாளில், கதாயுத உருவில், அவர் தோன்றினார். இவருக்கென, ஸ்தலசயன பெருமாள் கோவிலில், தனி சன்னதி உள்ளது.
இக்கோவிலில், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் அவரது அவதார உற்சவம், வரும், 7 - 16ல் நடைபெறுகிறது. தினமும் மாலை, திருமஞ்சனம், வீதியுலா, திருவாய்மொழி சேவை,
நவ., 15 காலை, திருத்தேர் உற்சவம், 17ல், விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது.