சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் ஐப்பசி மாத பூச விழா
ADDED :2577 days ago
சங்கராபுரம்:சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் ஐப்பசி மாத பூச விழா நடந்தது.மன்ற செயலர் நாராயணன் தலைமை தாங்கினார். வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துகருப்பன், வியாபாரிகள் சங்க செயலர் குசேலன், பொருளாளர் ராசேந்திரன், பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். சக்கரவர்த்தி வரவேற்றார்.மன்ற பூசகர்கள் சிவஞான அடிகள், கார்த்திகேயன் முன்னிலையில் அகவல் படிக்கபட்டு உலக அமைதிக்காக பிரார்த்திக்கப்பட்டது. சிறப்பு ஜோதி தரிசனத்திற்கு பின் பிரசாதம் வழங்கபட்டது.