உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சாயதன பூஜைக்கான ரூபங்கள்

பஞ்சாயதன பூஜைக்கான ரூபங்கள்

பஞ்சாயதன பூஜைக்கான ரூபங்கள்1. மஹாகணபதி  சோணபத்ரம்,2. அம்பிகை  ஸ்வர்ண ரேகா,3. விஷ்ணு  சாளக்ராமம்,4. ஆதித்யன்  ஸ்படிகம்,5. சிவன்  பாணம், முதலிய ரூபம் இல்லாத, பூமியிலிருந்து கிடைக்கும் இயற்கையான தாதுக்கள்.1. பூர்வாங்க பூஜைகள்1. தீப மந்திரம்(விளக்கை ஏற்றி வைத்து, தீபத்தைப் பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)தீபஜ்யோதி: பரம் ப்ரஹ்மதீபஜ்யோதிர் ஜனார்த்தன:தீபோ ஹரது மே பாபம்தீபஜ்யோதிர் நமோஸஸ்து தே2. ஆசமனம்(நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். இதே போல் நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆசமனம், அங்கவந்தனம் ஆகியன செய்தால், நமது உள்ளமும், உடலும் சுத்தமாகிறது என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணர வேண்டும். எல்லா நித்ய கர்மாக்களுக்கும், வைதிக கர்மாக்களுக்கும் ஆசமனம், அங்க வந்தனம் இன்றியமையாததாகும்.)(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங் கையில் விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)ஓம் அச்யுதாய நம:ஓம் அனந்தாய நம:ஓம் கோவிந்தாய நம:அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)(ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசத்துக் கொள்ள வேண்டும்.)1. கேச ’வ  வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்3. மாதவ  வலக்கை மோதிர விரல் வலக்கண்4. கோவிந்த  வலக்கை மோதிர விரல் இடக்கண்5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி7. த்ரிவிக்ரம்  வலக்கை சிறுவிரல், வலது காது8. வாமன  வலக்கை சிறுவிரல் இடது காது9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்10. ஹ்ருஷீகேச ’ வலக்கை நடுவிரல், இடது தோள்11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலைகுரு த்யானம்குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:குருர்தேவோ மஹேச் ’ வர:குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்மதஸ்மை ஸ்ரீகுரவே நம:4. கணபதி தியானம்இரண்டு கைகளிலும் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.சு’க்லாம்பரதரம் விஷ்ணும்ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்ப்ரஸன்ன வதனம் த்யாயேத்ஸர்வ விக்னோபசா ’ந்தயே5. ப்ராணாயாமம்(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கையிலும், மூச்சை மெதுவாக வெளியிடும் போதும், இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாகச் சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம்மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம்தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோதேவஸ்ய தீமஹி, தியோ யோ ந:ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்ஸுவரோம்(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)6. ஸங்கல்பம்(வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக்கொண்டு, இடது கையுடன் சேர்த்து வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு, அக்ஷதையை வடக்கே போடவும்.)மமோபாத்த ஸமஸ்த துரித, க்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,கரிஷ்யமாணஸ்ய கர்மண:நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ விக்னேச்’வர பூஜாம் கரிஷ்யே7. ஆஸன பூஜை(பூஜை ஆரம்பிக்கும் முன் நாம் அமரும் ஆசனம் / பலகையை சுத்தப்படுத்துவதற்காக, கீழ்க்காணும் மந்திரங்களை சொல்லி தீர்த்தம் தெளித்து பிறகு அமர்ந்து கொள்ளவும்.)ப்ருத்வி த்வயா த்ருதா லோகாதேவி த்வம் விஷ்ணுனா த்ருதாத்வம் ச தாரய மாம் தேவிபவித்ரம் குரு ச ஆஸனம்8. ஆத்ம பூஜை(மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானித்து கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி தலையில் அக்ஷதையைப் போட்டுக்கொள்ளவும்.)தேஹோ தேவாலய: ப்ரோக்த:ஜீவோ தேவ: ஸநாதன:த்யஜேத் அஜ்ஞான நிர்மால்யம்ஸோஹம்பாவேன பூஜயேத்2. ப்ரதான பூஜைத்யானம்சு’க்லாம்............ சா’ந்தயே சு’க்லாம்பரதரம் விஷ்ணும்ச ’சி’ வர்ணம் சதுர்புஜம்ப்ரஸன்ன வதனம் த்யாயேத்ஸர்வ விக்னோபசா ’ந்தயேப்ராணாயாமம்ஓம் பூ...... பூர்ப்புவஸ்ஸுவரோம் ப்ராணாயாமம்(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்வரேண்யம், பர்க்கோதேவஸ்யதீமஹி, தியோ யோ ந: ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)ஸங்கல்பம்பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்) தமிழ் வருஷங்கள் 601. பிரபவ2. விபவ3. சுக்கில4. பிமோதூத5. பிரஜோத்பத்தி6. ஆங்கிரஸ7. ஸ்ரீமுக8. பவ9. யுவ10. தாது11. ஈஸ்வர12. வெகுதான்ய13. பிரமாதி14. விக்கிரம15. விஷு16. சித்ரபானு17. சுபானு18. தாரண19. பார்த்திப20. விய21. சர்வஜித்து22. சர்வதாரி23. விரோதி24. விக்ருதி25. கர26. நந்தன27. விஜய28. மன்மத30. துர்முகி31. ஏவிளம்பி32. விளம்பி33. விகாரி34. சார்வரி35. பிலவ36  சுபகிருது37. சோபகிருது38. குரோதி39. விசுவாவசு40. பராபவ41. பிலவங்க42. கீலக43. சௌமிய44. சாதாரண45. விரோதிகிருது46. பரிதாபி47. பிரமாதீச48. ஆனந்த49. ராக்ஷஸ50. நள51. பிங்கள52. காளயுக்தி53. சித்தார்த்தி54. ரௌத்திரி55. துன்மதி56. துந்துபி57. ருத்ரோக்காரி58. ரக்தாக்ஷி59. குரோதன60. அக்ஷய..... அயனே (உத்தராயணே   தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே  ஆடி முதல் மார்கழி வரை)......ருதௌ ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6தமிழ் மாதங்கள்         ருதுக்கள்1. சித்திரையும், வைகாசியும்  : வஸந்த ருது2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது....... மாஸேதமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்தமிழ் மாதங்கள்         ஸம்ஸ்க்ருத பெயர்கள்1. சித்திரை    1. மேஷம்2. வைகாசி    2. ரிஷபம்3. ஆனி    3. மிதுனம்4. ஆடி     4. கடகம்5. ஆவணி     5. சிம்மம்6. புரட்டாசி    6. கன்னி7. ஐப்பசி     7. துலாம்8. கார்த்திகை    8. விருச்’சிகம்9. மார்கழி     9. தனுஸு10. தை    10. மகரம்11. மாசி     11. கும்பம்12. பங்குனி    12. மீனம் ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.திதிகள்: 151. பிரதமை2. துவிதியை3. திருதியை4. சதுர்த்தி5. பஞ்சமி6. சஷ்டி7. சப்தமி8. அஷ்டமி9. நவமி10. தசமி11. ஏகாதசி12. துவாதசி13. திரயோதசி14. சதுர்த்தசி15. பவுர்ணமி அல்லது அமாவாசை..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்)........சு’ப்திதௌ திதிகள் : 151. பிரதமை2. துவிதியை3. திருதியை4. சதுர்த்தி5. பஞ்சமி6. சஷ்டி7. சப்தமி8. அஷ்டமி9. நவமி10. தசமி11. ஏகாதசி12. துவாதசி13. திரயோதசி14. சதுர்த்தசி15. பவுர்ணமி அல்லது அமாவாசை.........வாஸர யுக்தாயாம் தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்தமிழ்நாட்கள்        ஸம்ஸ்க்ருத பெயர்கள்1. ஞாயிற்றுக்கிழமை    : பானுவாஸரம்2. திங்கட்கிழமை    : இந்துவாஸரம்3. செவ்வாய்க்கிழமை    : பௌமவாஸரம்4. புதன்கிழமை        : ஸௌம்யவாஸரம்5. வியாழக்கிழமை    : குருவாஸரம்6. வெள்ளிக்கிழமை    : பிருகுவாஸரம்7. சனிக்கிழமை        : ஸ்திரவாஸரம்........நக்ஷத்ர யுக்தாயாம் நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்நக்ஷத்திர பெயர்கள்    ஸம்ஸ்க்ருத பெயர்கள்1. அஸ்வினி         அஸ்வினீ2. பரணி        அபபரணி3. கார்த்திகை         க்ருத்திகா4. ரோகிணி         ரோஹிணி5. மிருகசீர்ஷம்         ம்ருகசீர்ஷ6. திருவாதிரை / ஆருத்ரா      ஆர்த்ரா7. புனர்பூசம்         புனர்வஸு8. பூசம்         புஷ்ய9. ஆயில்யம்         ஆஸ்லேஷா10. மகம்         மக11. பூரம்         பூர்வ பல்குனி12. உத்திரம்         உத்தர பல்குனி13. அஸ்தம்         ஹஸ்தசு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்...... கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),... நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, .... (பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)நாமதேயஸ்யஅடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.மமோபாத்த, ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீ பரமேச்’வர ப்ரீத்யர்த்தம், சு’பே, சோ’பனே, முஹுர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண:, த்விதீய பரார்த்தே, ச்’வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்ச ’திதமே, கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே, மேரோ; தக்ஷிண பார்ச்’வே, ச ’காப்தே அஸ்மின் வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, *........நாம ஸம்வத்ஸரே, *....அயனே, *....ருதௌ, *.......மாஸே, *.....பக்ஷே, *.....சு’பதிதௌ, *.........வாஸரயுக்தாயாம், *......நக்ஷத்ரயுக்தாயாம், *...சு’பயோக சு’பகரண ஸகல விசே ’ஷண விசி’ஷ்டாயாம், அஸ்யாம் சு’பதிதௌ,அஸ்மாகம் ஸஹ குடும்பாநாம் க்ஷேமஸ்தைர்ய, வீர்ய, விஜய, ஆயுராரோக்ய, ஐச்’வர்யாபி வ்ருத்யர்த்தம், அசஞ்சல நிஷ்கபட பக்தி ஸித்யர்த்தம், ஸபரிவார ஸாம்ப பரமேச் ’வர ப்ரீத்யர்த்தம், யாவத் ச ’க்திம், த்யான ஆவாஹனாதி ஷோடசோ ’ பசாரை: பஞ்சாயதன பூஜாம் கரிஷ்யே ததங்கம் கலசபூஜாம் ச கரிஷ்யே (அக்ஷதையை வடக்குபுறம் கீழே போட்டு கை அலம்பவும்)கண்டா பூஜை(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.ஆகமார்த்தம் து தேவானாம்கமநார்த்தம் து ரக்ஷஸாம்கண்டாரவம் கரோம்யாதௌதேவதாஹ்வான லாஞ்ச்சனம்10. கலச ’ பூஜைஇந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமிகீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமிபிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.ஓம் கங்காயை நம:ஓம் யமுனாயை நம:ஓம் கோதாவர்யை நம:ஓம் ஸரஸ்வத்யை நம:ஓம் நர்மதாயை நம:ஓம் ஸிந்தவே நம:ஓம் காவேர்யை நம:ஓம் ஸரஸ்வத்யை நம:ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமிபிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.கலச ’ ச்’ லோகம்கலச ’ஸ்ய முகே விஷ்ணு:கண்டே ருத்ர: ஸமாச்’ரித:மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மாமத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:குக்ஷௌ து ஸாகரா: ஸர்வேஸப்தத்வீபா வஸுந்தராருக்வேதோ (அ)த யஜுர்வேத:ஸாமவேதோ (அ) ப்யதர்வண:அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வேகலசா ’ம்பு ஸமாச்’ரிதா:ஆயாந்து தேவபூஜார்த்தம்துரிதக்ஷயகாரகா:கங்கே ச யமுனே சைவகோதாவரி ஸரஸ்வதிநர்மதே ஸிந்து காவேரிஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குருஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.ச ’ங்க பூஜாகலச தீர்த்தத்தினால் சங்கத்தை (சந்தனம் இட்டபின்) நிரப்பவும். (சங்கம் இல்லாத இடத்தில் இது தேவையில்லை.) த்வம் புரா ஸாகரோத்பன்னோ விஷ்ணுனா வித்ருத: கரேதேவைச்’ச பூஜித: ஸர்வை: பாஞ்சஜன்ய நமோஸ்து தேச ’ங்கம் சந்த்ரார்க தைவத்யம் குக்ஷௌ வருண தைவதம்ப்ருஷ்டே ப்ரஜாபதிச்’சைவ அக்ரே கங்கா ஸரஸ்வதித்ரைலோக்யே யானி தீர்த்தானி மஹா தேவஸ்ய சாக்ஞயாஆயாந்தி தாநி ச’ங்கேது தஸ்மாத் ச’ங்கம் ப்ரபூஜயேசங்க தீர்த்தத்தால் பூஜா திரவியங்களையும் தன்னையும் மூன்று தடவை புரோக்ஷித்துக் கொண்டு, மறுபடியும் காயத்ரியை சொல்லி சங்கத்தை தீர்த்தத்தால் நிரப்பவும்.ஆத்ம பூஜாதேஹோ தேவாலய: ப்ரோக்தோ ஜீவோ தேவ: ஸநாதன:/ த்யஜே  தஜ்ஞான நிர்மால்யம் ஸோஹம் பாவனே பூஜயேக்// (அக்ஷதையை தன் மீது போட்டுக் கொள்ளவும்)பீட பூஜா(ஐந்து தேவதைகளை வைத்துள்ள தாம்பாளம்/கோலம் ஆகியவற்றின் மீது புஷ்ப அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)ஓம் ஸகல  குணாத்ம  ச ’க்தியுக்தாய யோக பீடாத்மனே நம:ஆதாரச’க்த்யை நம:/மூலப்ரக்ருத்யை நம:/ஆதிவராஹாய நம:/ ஆதி கூர்மாய நம:/ அனந்தாய நம:/ப்ருதிவ்யை நம:/ ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம:/தச ’திக்பாலேப்யோ நம:/த்யானம்கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹேகவீம் கவீனாமுபமச்’ரவஸ்தமம்/ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதேஆன: ச்’ருண்வன்னூதிபி: ஸீத ஸாதனம்//மஹா கணபதிம் த்யாயாமி / ஆவாஹயாமி//(புஷ்பம் அக்ஷதைகளை கணபதியிடம் ஸமர்ப்பிக்கவும்)ஆஸத்யேன  ரஜஸா வர்த்தமானோநிவேச ’யன்னம்ருதம் மர்த்யஞ்ச/ஹிரண்யயேன ஸவிதாரதேனாதேவோயாதி புவனா விபச்’யன்//ச்சாயா தேவீ ஸமேத ஸூர்ய நாராயணம்த்யாயாமி/ ஆவாஹயாமி/(புஷ்பம் அக்ஷதைகளை சூர்யனிடம் ஸமர்ப்பிக்கவும்)ஸஹஸ்ர  சீ’ர்ஷா புருஷ:/ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்/ஸ பூமிம் விச்’வதோ, வ்ருத்வா/அத்யதிஷ்ட்டத்தசா’ங்குலம்//பூமி நீளா ஸமேத ஸ்ரீமஹாவிஷ்ணும்த்யாயாமி/ ஆவாஹயாமி(புஷ்பம் அக்ஷதைகளை விஷ்ணுவிடம் ஸமர்ப்பிக்கவும்)கௌரீ மிமாய ஸலிலானிதக்ஷத்யேகபதீ த்விபதீ ஸர சதுஷ்பதீ/அஷ்டாபதீ நவபதீ பபூவுஷீஸஹஸ்ராக்ஷரா பரமே வ்யோமன்//கௌரீம் த்யாயாமி /ஆவாஹயாமி(புஷ்பம் அக்ஷதைகளை தேவியிடம் ஸமர்ப்பிக்கவும்)த்ரியம்பகம் யஜாமஹேஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்/உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர்  முக்ஷீய மாம்ருதாத்/ஸ்ரீ சாம்ப பரமேச்’ரம் த்யாயாமி/ ஆவாஹயாமி(புஷ்பம் அக்ஷதைகளை பரமேச்’வரரிடம் ஸமர்ப்பிக்கவும்)ஆஸனாத்யுபசாரா:(ஆஸனம் முதலிய உபசாரங்கள்)ஆவாஹிதாப்ய: ஸர்வாப்யோ தேவதாப்யோ நம:ஆஸனம் ஸமர்ப்பயாமி(ஆஸனத்திர்க்கு புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்)பாத்யம் ஸமர்ப்பயாமி(தீர்த்தம் ஸமர்ப்பிக்கவும்)அர்க்யம் ஸமர்ப்பயாமி(புஷ்பத்துடன் தீர்த்தம் ஸமர்ப்பிக்கவும்)ஆசமனீயம் ஸமர்ப்பயாமி(தீர்த்தம் ஸமர்ப்பிக்கவும்)ஸ்நானம் ஸமர்ப்பயாமி(அபிஷேகம் செய்விக்கவும்.)அம்பிகைக்கும், விஷ்ணுவுக்கும், ஆதித்யனுக்கும், கணபதிக்கும் அவரவர்களுக்குரிய மந்திரங்களாலும், பரமசிவனை கூடியவரை ருத்ரப்ரச்’னம், புருஷஸூக்தம் முதலியவற்றாலும் உபசரிக்க வேண்டும். மற்றும் பஞ்சாம்ருதம், பால், தயிர் இளநீர், ஏலம் கலந்த தீர்த்தம் முதலியவற்றால் அபிஷேகம் செய்வித்து, ஆசனமளித்து, உலர்ந்த துணியால் துடைத்து, வஸ்திரங்களை அணிவித்து ஆஸனத்தில் ஸ்தாபிக்கவும் (பசும்பால் அவசியமானது.)கந்தான் தாரயாமி(சந்தனமிடவும்)குங்குமம் ஸமர்ப்பயாமி(குங்குமிடவும்)உபவீதம் ஸமர்ப்பயாமி(பூணூல் அணிவிக்கவும்)ஆபரணம் ஸமர்ப்பயாமி(ஆபரணங்கள் அணிவிக்கவும்.)அர்ச்சனை(புஷ்பத்தால் அர்ச்சிக்கவும்.)விநாயகர்ஓம் ஸுமுகாய        நம:ஓம் ஏகதந்தாய        நம:ஓம் கபிலாய        நம:ஓம் கஜ கர்ணகாய    நம:ஓம் லம்போதராய    நம:ஓம் விகடாய        நம:ஓம் விக்ன ராஜாய    நம:ஓம் விநாயகாய        நம:ஓம் தூமகேதவே        நம:ஸூர்யன்ஓம் மித்ராய        நம:ஓம் ரவயே        நம:ஓம் ஸூர்யாய        நம:ஓம் பானவே        நம:ஓம் ககாய        நம:ஓம் பூஷ்ணே         நம:விஷ்ணுஓம் அச்யுதாய        நம:ஓம் அனந்தாய        நம:ஓம் கோவிந்தாய        நம:ஓம் கேச ’வாய        நம:ஓம் நாராயணாய    நம:ஓம் மாதவாய        நம:ஓம் புருஷோத்தமாய    நம:ஓம் விஷ்ணவே        நம:ஓம் கணாத்யக்ஷாய    நம:ஓம் பாலசந்த்ராய    நம:ஓம் கஜானனாய        நம:ஓம் வக்ரதுண்டாய    நம:ஓம் சூ’ர்ப்பகர்ணாய    நம:ஓம் ஹேரம்பாய        நம:ஓம் ஸ்கந்தபூர்வஜாய    நம:ஓம் ஸித்திவிநாயகாய    நம:ஓம் ஹிரண்யகர்ப்பாய    நம:ஓம் மரீசயே        நம:ஓம் ஆதித்யாய        நம:ஓம் ஸவித்ரே        நம:ஓம் அர்க்காய        நம:ஓம் பாஸ்கராய        நம:ஓம் மதுஸூதனாய    நம:ஓம் த்ரிவிக்ரமாய    நம:ஓம் வாமனாய        நம:ஓம் ஸ்ரீதராய        நம:ஓம் ஹ்ருஷீகேசா’ய    நம:ஓம் பத்மநாபாய        நம:ஓம் தாமோதராய    நம:சிவன்ஓம் பவாய தேவாய    நம:ஓம் ச’ர்வாய தேவாய    நம:ஓம் ஈசானாய தேவாய    நம:ஓம் பசு’பதேர் தேவாய    நம:ஓம் ருத்ராய தேவாய    நம:ஓம் உக்ராய தேவாய    நம:ஓம் பீமாய தேவாய    நம:ஓம் மஹேதே தேவாய    நம:அம்பிகைஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்ஓம் ஸ்ரீமாத்ரே            நம:ஓம் ஸ்ரீமஹா ராக்ஜ்ஞ்ன்யை        நம:ஓம் ஸ்ரீமத் ஸிம்ஹா ஸனேச்’வர்யை    நம:ஓம் நிர்மமாயை            நம:ஓம் மமதாஹந்த்ரியை        நம:ஓம் நிஷ்பாபாயை        நம:ஓம் பாபநாசி’ன்யை        நம:ஓம் நிஷ்க்ரோதாயை        நம:ஓம் க்ரோத ச’மன்யை        நம:ஓம் நிர்லோபாயை        நம:ஓம் லோபநாசி’ன்யை        நம:ஓம் நி:ஸம்ச’யாயை        நம:ஓம் ஸம்ச’யக்ன்யை        நம:ஓம் நிர்ப்பவாயை        நம:ஓம் பவநாசி’ன்யை        நம:ஓம் நிர்விகல்பாயை        நம:ஓம் நிராபாதாயை        நம:ஓம் பேதநாசி’ன்யை        நம:ஓம் நிர்பேதாயை        நம:ஓம் நிர்நாசா’யை            நம:ஓம் ம்ருத்யுமதன்யை        நம:ஓம் நிஷ்க்ரியாயை        நம:ஓம் நிஷபரிக்ரஹாயை        நம:ஓம் நிஸ்துலாயை        நம:ஓம் நீலசிகுராயை        நம:ஓம் நிரபாயாயை        நம:ஓம் நிரத்யாயை            நம:ஓம் துர்லபாயை            நம:ஓம் துர்காயை            நம:ஓம் துர்கமாயை            நம:ஓம் து:க்க ஹந்த்ர்யை        நம:ஓம் ஸுகப்ரதாயை        நம:ஓம் துஷ்டதூராயை        நம:ஓம் துராசாரச ’மன்யை        நம:ஓம் தோஷவர்ஜிதாயை        நம:ஓம் ஸ்ர்வக்ஞ்ஞாயை        நம:ஓம் ஸாந்த்ரகருணாயை        நம:ஓம் ஸமானாதிக வர்ஜிதாயை        நம:ஓம் ஸர்வச’க்திமய்யை        நம:ஓம் ஸர்வ மங்களாயை        நம:ஓம் ஸத்கதிப்ரதாயை        நம:ஓம் ஸர்வேச்’வர்யை        நம:ஓம் ஸர்வமய்யை        நம:ஓம் ஸர்வமந்த்ர ஸ்வரூபிண்யை        நம:ஓம் ஸர்வ யந்த்ராத்மிகாயை        நம:ஓம் ஸர்வதந்த்ர ரூபாயை        நம:ஓம் மனோன்மன்யை        நம:ஓம் மாஹேச்’வர்யை        நம:ஓம் மஹா தேவ்யை        நம:யா தேவீ ஸர்வபூதேஷு மாத்ரு ரூபணே ஸம்ஸ்த்திதாநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !