உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸம்பத் சு’க்ரவார விரத பூஜை மஹிமை

ஸம்பத் சு’க்ரவார விரத பூஜை மஹிமை

பண்டைக் காலத்தில் பாரதநாட்டின் ஒரு பகுதியை, பார்வதிபுரம் என்ற நகரைத் தலைநகரமாகக் கொண்டு, குணபாலன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். பெயருக்கேற்றபடி அவன் குணநலன்கள் கொண்டவனாகவும், குடிமக்களை நேசித்து அவர்கள் நல்வாழ்வில் அக்கறை கொண்டவனாகவும் இருந்தான். அவனுக்கு மனைவியாக வாய்ந்த மங்கை நல்லாளின் பெயர் சாந்தாதேவி என்பதாகும். அவளும், அரசனுக்கேற்ற தர்ம பத்தினியாக இருந்தாள். பண்பின் உறைவிடமாகவும், அழகு மிகுந்தவளுமாகவும் இருந்த, இல்லாளை அடைந்த மன்னன் கொண்டிருந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவனது பிரஜைகளும், தாங்கள் இப்படிப்பட்ட குணவானாகிய மன்னனுடைய ஆளுகையின் கீழ் இருக்கிறோமே, எனப் பெருமை கொண்டிருந்தனர்.ரதி மன்மதன் போன்று இணைந்து சந்தோஷ வாழ்வு நடத்திக் கொண்டிருந்த, அரச தம்பதியருக்கு நாளாக நாளாக ஒரு குறை தோன்றத் தொடங்கியது. மணமாகி நெடு நாட்களாகியும் தங்களுக்குப் புத்திர பாக்கியம் இல்லையே என்பதுதான் அக்குறை. ஜோதிடர்களும் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களது ஆலோசனையின்படி, பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு கோதானம், பூதானம் முதலிய தானங்களும் வெகுவாக தரப்பட்டன. ஆனாலும் மகாராணிக்கு, பிள்ளைப்பேறு கிட்டாமலேயே இருந்தது. விசேஷ நாட்களில் அரண்மனையில் யாசகர்களுக்கு தர்மம் கொடுப்பது உண்டு. அச்சமயம் பலரும் வரிசையில் வந்து நின்று காத்திருப்பார்கள். அரசி தானே வந்து பிக்ஷை இடுவது வழக்கம். ஒவ்வொரு முறையும் அவ்விதம் பிக்ஷை இட்டுச் சென்றதுத் திரும்பும்போது தனக்குப் புத்திரச் செல்வம் வேண்டும் என்று சிவபெருமான் திருஉரு முன் வேண்டிக் கொள்வாள் சாந்தாதேவி. ஈசனார் அவளது நிலைக்கு இரங்கி, அவள் கோரிக்கையை நிறைவேற்றத் திருவுள்ளம் கொண்டார்.ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் அரண்மனை முன் காத்திருந்த யாசகர்கள், வரிசையாக வந்து மகாராணி கையால் கொடுக்கப்பட்ட பிக்ஷையை பெற்றுத் திரும்பிக் கொண்டிருந்தனர். வரிசையில் காத்திருந்த ஓர் அந்தணர் தம் பிக்ஷா பாத்திரத்தை அரசி முன் நீட்டியவர் சட்டென்று அதை இழுத்துக்கொண்டார். பிறகு மகாராணியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவர் ஒன்றும் பேசாமல் அவ்விடத்தை விட்டு அகன்று செல்லத்தொடங்கினார். சாந்தா தேவி திடுக்கிட்டுப் போய் ‘தான் தெரியாது தவறு ஏதும் செய்து விட்டோமோ’ என எண்ணிப் பதைபதைத்து ஓடிச் சென்று அவர் கால் முன் விழுந்து நமஸ்கரித்த வாறே, “சுவாமி, அடியாள் செய்த பாவம் என்ன? ஏன் பிக்ஷையை வாங்காமல் செல்கிறீர்கள்?” எனக் கேட்டாள். அந்தணர் வடிவில் இருந்த சிவபெருமான்” ஓ! மகாராணி உனக்கு புத்தி பாக்கியம் இல்லையே. பிள்ளை இல்லாதவர்களிடமிருந்து நான் பிக்ஷை பெறுவதில்லை ” என்று பதிலளித்தார். மன்னன் மனைவி கண்களில் நீர் பெருக “மகாத்மாவே தாங்கள் அறியாதது ஏதும் இல்லை. இந்த அபாக்கியவதியின் வயிற்றில் குழந்தை உண்டாவதற்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும்” என்று இறைஞ்சினாள். அவர் சிந்தை இரங்குவது போல் சிறிது நேரம் கண்மூடி நின்றார். பிறகு அருள்பொழியும் விழிகளைத் திறந்து அவளை நோக்கி “மாது சிரோன்மணியே! உனக்கு புத்திரன் பிறக்க வேண்டுமானால் நீ உன் கணவன் மூலமாக ஒரு நற்காரியம் செய்ய வேண்டும்” என்றார். “சொல்லுங்கள் ஸ்வாமி, செய்யக் காத்திருக்கிறேன்” என்றாள் சாந்தா தேவி. “உங்கள் அரண்மனையை ஓட்டியுள்ள காட்டுப்பகுதியை சீர்படுத்தி அதில் ஐந்து வீடுகள் கட்டி, அவற்றை ஐந்து அந்தணர்களுக்கு தானம் கொடுங்கள். அதன் பின் உங்கள் அபீஷ்டகம் நிறைவேறும்” என்று மொழிந்து விட்டு அந்தாத்யானமானார் அவர். அந்தணர் வடிவில் வந்து தனக்கு வாக்கு கொடுத்தவர் எல்லாம் வல்ல இறைவனே என்று உள்ளுணர்வினால் உணர்ந்து கொண்டாள் மகாராணி. அவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. மன்னனிடம் சென்று செய்தியினை தெரிவித்தாள். சந்தோஷம் கொண்ட அவன் காடுகளை திருத்தி, ஐந்து வீடுகளைக் கட்ட ஆணைகள் பிறப்பித்தான். அவ்விதமே வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. அரசன் ஐந்து அந்தணர் குடும்பங்களுக்கு அவைகளை தானமாக அளிக்க, அவர்களும் அதில் வந்து குடி புகுந்தனர்.திருக்கயிலையில் இருந்த சிவபிரான், சாந்தாதேவிக்கு தான் கொடுத்த வரத்தின் பலனை அளிக்கத் திருவுள்ளம் கொண்டு அன்னை பார்வதியை அழைத்துக் கொண்டு குணபாலன் கோலோச்சும் பதிக்கு உருமாறி வந்தார். அரண்மனையைக் கடந்து, ஆரண்யப் பகுதிக்குள் அவர்கள் நுழைந்தனர். பரமேஸ்வரன் தான் ஒரு மரத்தடியில் நின்று கொண்டு பார்வதி தேவியை நோக்கி, “தேவி! அதோ குணபாலன் தானமளித்த வீடுகளில் ஐந்து குடும்பங்கள் உள்ளன. நீ அங்கே சென்று உன் மனத்திற்குப் பிடித்த வீட்டிற்குள்ளே போய் அவர்கள் தரும் உபசாரத்தை ஏற்றுக்கொண்டு அவர்கள் வாழ்வில் வேண்டுவன கிடைக்க வரம் தந்து விட்டு வா ” என்றார். பார்வதி தேவி அவ்விதமே ஒரு எளிமையான சுமங்கலி வடிவில் அவ்வீடுகளை நோக்கிச் சென்றாள். முதல் விட்டு வாசலில் ஒரு பெண் தூங்கி வழிந்த முகத்தோடு கையில் சாணம் கரைத்த பாத்திரத்துடன் வந்தவள் பார்வதியைப் பார்த்ததும் கையிலிருந்த துடைப்பத்தை ஓங்கியவளாக “எட்டிப்போ! இங்கே உனக்கு என்ன வேலை? பிச்சை கேட்க வந்தாயா?” என்று விரட்டினாள். தேவி முகத்தில் புன்னகையுடன் அடுத்த வீடு நோக்கி நகர்ந்தாள். அந்த வீடடிற்கு உரியவளோ வாசலில் அலங்கோலமாக உட்கார்ந்து, தலையை விரித்துப் போட்டுக்கொண்டு பேன் பார்த்தவாறு இருந்தாள். முகத்தைச் சுளித்துக்கொண்ட தேவி, அடுத்த வீட்டை பார்த்து நடந்தாள். அங்கே வீட்டின் முன்பகுதியில் மாமியாருடன் மருமகள் உரத்த குரலில் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள். வசைமாரி சகிக்கக் கூடாததாக இருந்தது. தேவி காதுகளைப் பொத்திக் கொண்டு நடையை எட்டிப்போட்டாள். நான்காவது வீட்டிலும் ஏறக்குறைய இதே நிலை. அன்று வெள்ளிக்கிழமையாக இருந்தும் அந்த வீட்டுக்காரி வீட்டு வாசலைக் கூட்டிப்பெருக்காமல், புழுங்கிய நெல்லை உரலில் போட்டு க் குத்திக்கொண்டிருந்தாள். பார்வதி அவ்வீட்டையும் கடந்து கடைசி வீட்டிற்குச் சென்றாள். அவ்வீட்டு வாசல் அழகாகவும், சுத்தமாகவும் கூட்டி மெழுகப்பட்டு உள்ளேயும் வெளியேயும் செம்மண் கோலங்களுடன் மங்களகரமாக விளங்கியது.தேவியின் மனம் மகிழ்வினால் நிறைய, அவ்வீட்டினுள் நுழைந்தாள். அங்கு ஓர் பெண்மணி துளசி மாடத்தில் விளக்கேற்றி வைத்து அதன் முன் வணங்கியவளாக “ என் தாயே! ஜகன் மாதா! பிருந்தாவன வாஸினீ! என் வறுமையை விரைவில் போக்கி எங்கள் வாழ்வில் வளம் கொழிக்கச் செய்வாய் அம்மா” என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். தேவியைக் கண்டதும் எழுந்து வந்து வணங்கிய அவள் “அம்மா வரவேண்டும் இந்த ஏழையின் வீட்டிற்குள் என்ன காரியமாக வந்தீர்கள்?” என விசாரித்தாள். பார்வதி அவள் அளித்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டு “பெண்ணே! இங்கே வேறு யாரும் காணப்படவில்லையே. உன் கணவர் குழந்தைகள் எல்லாம் எங்கே?” என்று கேட்டாள். அப்பெண் தாயே எந்த முன்ஜென்மத்தில் செய்த பாபமோ! எங்கள் குடும்ப வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. தினமும் என் கணவரும் ஒரே பிள்ளையும் ஊருக்குள் சென்று உபாதானம் (பிக்ஷை) பெற்று வருவார்கள். அதை வைத்துக் கொண்டுதான் நாங்கள் அரைவயிற்றுக் கஞ்சியாவது குடிக்கிறோம். இன்றும் அதற்குத் தான் அவர்கள் போய் இருக்கிறார்கள்” என்றாள்.பார்வதி தேவி மனம் கனிந்து “பெண்ணே நான் சொல்கிற பூஜையை தவறாது செய்தால் உங்களது வீட்டில் வறுமை நீங்கி வளமை கொழிக்கும் ” என்றவுடன் அப்பெண்” அவ்விதமே செய்கிறேன் தாயே. விபரம் தெரிவியுங்கள்” என்று தேவி முன் பணிந்தாள். பார்வதி தேவி “இதனை சம்பத் சுக்ரவார விரத பூஜை என்று சொல்லுங்கள். இதனை ஐந்து வருடங்கள் தொடர்ந்து செய்தால் சகல பாக்கியமும் உண்டாகும். பூஜை நடத்த வேண்டிய விதத்தைச் சொல்கிறேன் கேள்.முதல் வருடம், புத்திரன் உண்டாவதற்குப் பூரண கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும். அது எப்படி எனில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், ஓர் செம்பு நிறைய சுத்தம் ஜலம் வைத்து, அதற்கு பக்கத்தில் கூம்பு வடிவித்திலோ (அ) முகம் வடிவத்திலோ மஞ்சளில் அம்மனைப் பிடித்து வைத்து அல்லது மஞ்சள் கொம்பின் குறுக்கே முளைத்திருக்கிற மஞ்சளை (கொம்பு மஞ்சள்) வைத்து, அம்மனை அதில் ஆவாஹனம் செய்து, பூஜை செய்ய வேண்டும். இப்பூஜையை ஆடி, தை மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று எந்தக் கலசம் வைக்கிறார்களோ, அந்தக் கலசத்தையே அவ்வருடம் முழுவதும் வைக்க வேண்டும். வருடத்தின் நடுவில் வேறு கலசத்தை மாற்றக்கூடாது.இரண்டாம் வருடம் சம்பத் பெருகுவதற்கு, சந்தனக் கல்லின் மேல், அம்மனை மேலே குறிப்பிட்டது போல் மஞ்சளில் ஆவாஹித்து பூஜை செய்ய வேண்டும்.மூன்றாம் வருடம் பாக்கியங்கள் பெருகுவதற்கு பால்கவசம் அதாவது செம்பு நிறைய பாலில் பூரண கலசம் வைத்து மேல் சொன்னபடி அம்மனை ஆவாஹித்து பூஜை செய்ய வேண்டும்.நான்காம் வருடம் ஆயுள் வளருவதற்கு, படி நிறைய அரிசி வைத்து, அதன் மேல் மஞ்சள் அம்மனை ஆவாஹித்து பூஜை செய்ய வேண்டும்.ஐந்தாம் வருடம் மாங்கல்யம் பெறுவதற்கு, வெற்றிலையின் பின்புற காம்புகள் வெளியே இருக்குமாறு செய்து, அதன் மேல் மஞ்சள் அம்மனை வைத்து பூஜை செய்ய வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் முடிந்தால் ஐந்து சுமங்கலிப்பெண்களைச் சாப்பிடச் செய்து அனுப்புதல் உத்தமம். இல்லை எனில் ஐந்து சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுப்பது அவசியம். கடைசி வெள்ளிக்கிழமை அன்று ஐந்து சுமங்கலிகளைச் சாப்பிடச் செய்து, ஒவ்வொருவருக்கும் புஷ்பம், சந்தனம், மஞ்சள், குங்குமம், தக்ஷிணை முதலியவைகளை ஒரு முறத்தில் வைத்து, இன்னொரு முறத்தினால் மூடி, ஒரு ரவிக்கைத் துண்டுடன் கொடுக்க வேண்டும். வசதி இருந்தால் புடவை வாங்கிக் கொடுக்கலாம். அப்படிப்பட்ட சுக்ர வார விரத பூஜையை இந்த ஆடி, தை மாத வெள்ளிக்கிழமைகளில் நான்கு உனக்கு எடுத்துக் கொடுக்கிறேன். இதே மாதிரி தொடர்ந்து ஐந்து வருடமும் விரதம் இருந்து பூஜித்தாயானால் உனக்கு சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்” என்று சொல்லி அவளுக்கு, முதல் பூரண கலசம் வைத்து பூஜை எடுத்துக் கொடுத்தாள். அந்தப் பெண்ணும் வெகு சந்தோஷத்துடன் பூஜை செய்து முடித்தாள்.பூஜை முடிந்ததும் அப்பெண்மணி தேவியிடம் “தாயே! என்னால் முடிந்தவரை விருந்து வைக்கிறேன். இருந்து சாப்பிட்டு விட்டுச்செல்லுங்கள்” என்று வேண்டினாள்.தேவி சரியெனவும், அவள் உள்ளே சமையல் செய்யச் சென்றாள். பார்வதி தேவி அங்கே ஓர் பானையிலிருந்து ஒரு பிடி அரிசியை எடுத்து வேறொரு பாத்திரத்தில் ‘அக்ஷய அக்ஷய ’ என்று சொல்லியவாறே போட்டாள். அதன் பொருள் ‘என்றும் குறையாதிருக்கட்டும்’ என்பதாகும். அப்பாத்திரம் உடனே அரிசியால் நிறைந்தது. தேவி வெளியே சென்று இறைவனுடன் சேர்ந்து கைலாசத்திற்குத் திரும்பினாள்.பிக்ஷைக்குச் சென்றிருந்த அவ்வீட்டுப் பெண்மணியின் கணவனும், பிள்ளையும் வீடு திரும்பி வந்து பார்க்கும் போது வீட்டின் அமைப்பே மாறி இருந்ததைக் கண்டு வியப்படைந்தார்கள். சமையலை முடித்துக்கொண்டு திரும்பிய அப்பெண் வீட்டில் எல்லா பண்டங்களும் நிரம்பி வழிந்திருப்பதைக் கண்டு அதி ஆச்சர்யம் அடைந்தாள். வந்திருந்த சுமங்கலி சாட்சாத் லோக மாதாவே என்பதையும் புரிந்து கொண்டாள். நடந்த விருத்தாந்தங்களை கணவனிடம் கூறினாள். அனைவரும் தேவியைப் பலவாறாகத் துதித்தார்கள்.வறுமையில வாடிய அக்குடும்பத்திற்கு ஏற்பட்ட வளம் பற்றிய செய்தி ஊரெங்கும் பரவி அரண்மனைக்கும் எட்டியது. மகாராணியே நேரில் வந்து அவ்வீட்டுப் பெண்மணியைப் சந்தித்து அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்திற்கான விபரங்களைத் தெரிந்து கொண்டு, புத்திர பாக்கியம் பெறுவதற்காக தானும் அதே போல் சம்பத் சுக்ரவார விரத பூஜையை அனுஷ்டிக்க தீர்மானித்தாள். அதை எப்படி செய்ய வேண்டும் என அவ்வீட்டுப் பெண்மணியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, அரண்மனைக்கு திரும்பி தவறாது சம்பத் சுக்ரவார பூஜையை முறைப்படி செய்யத் தொடங்கினாள். முதல் ஆண்டே அவளுக்கு புத்திர சந்தானம் வாய்க்கப்பெற்றது. வருடக் கடைசியில் அரசிக்கு அழகான ஓர் ஆணமகவு பிறக்க, மன்னனும் தனக்கு வாரிசு உதித்தான் என்று மனம் நெகிழ்ந்தான். அரச தம்பதியர் ஈசனையும், இறைவியையும் வாயாற துதித்தும் வழிபட்டும் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள். பிறகு பன்னெடுங்காலம் அவர்கள் சகல நலன்களுடனும் வாழ்ந்திருந்தார்கள்.பலன்:  சம்பத் சுக்ரவார விரத பூஜையின் மகிமையை கூறும் இந்நூலை வாங்கிப் படித்து இதில் கூறப்பட்டுள்ளபடி பூஜை செய்து விரதமிருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் மற்றும் சகல விதமான சம்பத்துகளும் கிடைக்கும். இவ்விரத பூஜை செய்பவர்கள் எல்லா சம்பத்துகளையும் பெற்று சுகமாக வாழ்வார்கள்.ஸம்பத் சு’க்ரவார விரத பூஜைஇந்த லக்ஷ்மி பூஜையைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறவர்கள் பின்வரும் 13 குறிப்புகளின்படி நடக்க வேண்டும்.குறிப்புகள்:1. வெள்ளிக்கிழமை தோறும் நீராடிய பின்னர், பூஜையைத் தொடங்க வேண்டும்.2. தை அல்லது ஆடி மாதத்தில், முதல் வெள்ளிக்கிழமையில், முதன்முதலில் பூஜை ஆரம்பிக்க வேண்டும்.3. முதன்முதலில் பூஜை தொடங்கும் போது குருவைக் கொண்டே பூஜை நடத்தவேண்டும்.4. பூஜை செய்து வைக்க உபாத்தியாயர் கிடைக்கவில்லை என்றாலும், பூஜை செய்ய வேண்டிய கல்பமும் இந்தப் புத்தகத்தில் சேர்த்து அச்சிடப்பட்டிருப்பதால் இதைப் பார்த்துக்கொண்டு பக்தர்களே பூஜை செய்து கொள்ளலாம்.5. பூஜை தொடங்குவதற்கு முன்பு, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, பிள்ளையார் பூஜை செய்த பிறகு, லக்ஷ்மி பூஜை ஆரம்பிக்க வேண்டும்.6. லக்ஷ்மி அஷ்டோத்தரம் சொல்லி, அர்ச்சனை செய்ய வேண்டும். அவகாசமிருந்தால் ஹைஸ்ரநாமம் செய்யலாம். ஓங்காரத்தைச் சொல்லாமல் நாமத்தை மாத்திரம் சொல்லி அர்ச்சிக்க வேண்டும்.7. புஷ்பம் அதிகம் கிடைக்காவிட்டால், மஞ்சள் அக்ஷதையைக் கொண்டும் அர்ச்சனை செய்யலாம்.8. குறைந்த பக்ஷம் பாயஸமாவது நைவேத்தியம் செய்ய வேண்டும்.9. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பூஜை செய்த பிறகு ஐந்து சுமங்கலிகளுக்குச் சாப்பாடு போட வேண்டும் வசதியில்லாவிட்டால், ஐந்து சுமங்கலிகளுக்குக் குறையாமல் சந்தனம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு குறைந்தது ஒரு ரூபாயாவது தக்ஷிணை கொடுத்தனுப்ப வேண்டும். ஆனால் ஐந்தாவது வருடம் கடைசி வெள்ளிக்கிழமை பூஜை முடியும்போது சம்பத் சுக்ரவாரக் கதையில் சொல்லியுள்ளபடி நடக்க வேண்டும்.10. பூஜை முடிந்த பிறகு சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு முதலியன கொடுத்து அனுப்பிய பிறகு, லக்ஷ்மி அஷ்டோத்திரமும், லக்ஷ்மி அஷ்டகமும், சம்பத் சுக்வாரக் கதையையும் கட்டாயம் படிக்க வேண்டும். நேரமில்லாவிடில் இரவு அஸ்தமித்தவுடன் படிக்க வேண்டும். படித்த பிறகு பழம், கற்கண்டு ஏதாவது நைவேத்யம் செய்து கற்பூர ஹாரத்தி எடுக்க வேண்டும்.11. பூஜை செய்யும் நாளில் இரண்டு வேளையும் உணவு அருந்தலாம்.12. பகலில் பூஜைக்குப் பிறகும், இரவு கற்பூர ஹாரத்தி எடுத்த பிறகும், லக்ஷ்மியைப் பற்றிய பாடல்கள் பாடி ஹாரத்தி எடுக்க வேண்டும்.13. இரவில் ஹாரத்தி எடுத்த பிறகுதான் மடியோடு கலசத்தை யதாஸ்தானம் செய்து, அதில் உள்ள அரிசி, பால் வெற்றிலை முதலியவற்றைத் தன் குடும்பத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.14. பூஜைக்கு வேண்டிய பொருட்கள் பட்டியல் (பக்கம் 6 முதல் 7 வரை) பக்கங்களில் பார்க்கவும். இத்துடன் பஞ்சுமாலை, ரவிக்கை துணி.பூஜைக்கு தேவையான பொருட்கள்1. மஞ்சள் பொடி2. குங்குமம்3. சந்தனம்4. பூமாலை5. உதிரிப்பூக்கள்6. வெற்றிலை, பாக்கு7. ஊதுபத்தி8. சாம்பிராணி9. பஞ்சு (திரிக்காக)10. நல்லெண்ணெய்11. கற்பூரம்12. வெல்லம்13. மாவிலை14. வாழைப்பழம்15. அரிசி16. தேங்காய்17. தயிர்18. தேன்19. தீப்பெட்டி20. பூணூல்21. வஸ்த்ரம்22. அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)23. பஞ்சாம்ருதம் (வாழைப்பழம், பால், தேன், நெய், சர்க்கரை, கலந்தது)24. கோலப்பொடி / அரிசி மாவு25. பஞ்சகவ்யம்:1. பசுவின் சிறுநீர் (கோமியம்), 2. பசுவின் சாணம், 3. பால், 4. தயிர், 5. நெய்  இவை ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்ச கவ்யமாகும்.26. திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.குறிப்பு: ஹோமங்களுக்கு நெய் உபயோகிப்பது உத்தமம். ஒரு சில பூஜைகளில் நவதான்னியங்கள், கருகு மணிமாலை, பனைஓலை, மஞ்சள் கொத்து, ஏலக்காய் பொடி, கண் மை, அகல் விளக்கு, மூங்கில் தட்டு, பஞ்சினால் செய்த மாலை, போன்ற சில விசேஷ பொருட்கள் தேவைப்படுகின்றன. அந்தந்த பூஜையை செய்யும்போது அதற்கு தேவையானவற்றை முதலிலேயை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.மாற்றுப் பொருள்கள்பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமலிருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப்பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை.1. தேனுக்குப் பதிலாக வெல்லம்,2. வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம், முதலிய ராஜோபசாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம்.15. நைவேத்ய பொருட்கள்: கற்கண்டு சாதம், பாயஸம், கங்காம்ருதம், தேன், நெய், தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு பூஜை செய்ய உட்காரும் இடத்தை தீர்த்தத்தினால் “பூர்புவஸ்ஸுவ:” என்ற மந்திரத்தைச் சொல்லி, புரோக்ஷித்து பின்வரும் இரண்டு மந்திரங்களைச் சொன்ன பிறகு, ஆஸனம் பலகை அல்லது காய்ந்த வஸ்திரம் போட்டு, அதில் உட்காரவும்.நமோ பிரஹ்மண்ய தேவாய கோப்ராஹ்மண ஹிதாயச/ஜகத்திதாய கிருஷ்ணாய கோவிந்தாய நமோ நம://அபஸர்பந்து, தேபூதா யே பூதா, புவிஸம்ஸ்திதா:/யே பூதா, விக்னகர்தார: தே கச்சந்து சி’வாக்ஞயா//அபக்ராமந்து, பூதானி, பிஸாசா, ஸர்வதோ ஸ்திதம்/ஸர்வேஷாமவிரோதேன பூஜா கர்ம ஸமாரபே//ஆசமனம்அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:(உத்தரணியால் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டு ஒவ்வொரு மந்திரம் சொல்லி சாப்பிடவும்.)பின்வரும் 6 மந்திரங்களைச் சொல்லி ஒவ்வொரு மந்திரத்துக்கும், ஒவ்வொரு நமஸ்காரம் செய்து விட்டுப் பிறகு உட்காரவும்.குரூர் பிரம்மா, குருர் விஷ்ணுர், குருர்தேவோ மஹேச்’வர:/குருஸ் ஸாக்ஷாத் பரம்பிரம்ஹ தஸ்மை ஸ்ரீகுரவே நம://ஸ்ரீகுருப்யோ நம:குரவே ஸர்வலோகானாம் பிஷஜே பவேராகிணாம்/நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தயே நம://வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப/அவிக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா//உமாகோமள ஹஸ்தாப்ஜ ஸம்பாவித லலாடகம்/ஹிரண்யகுண்டலம் வந்தே குமாரம் புஷ்கரஸ்ரஜம்//ஸ்ரீவல்லீ தேவஸேனாஸமேத ஸ்ரீஸுப்ரமண்ய ஸ்வாமினே நம:/சாயா ஸுவர்சலாம்பா ஸமேதஸ்ரீஸூர்ய நாராயண ஸ்வாமினே நம://விக்னேச்’வர பூஜைமஞ்சள் பிள்ளையார் பூஜைஇப்பூஜையானது எல்லா ப்ரதான பூஜைகளுக்கும் மற்றும் எல்லா சுபகாரியங்களுக்கும் முதலில், ஆரம்பத்தில் செய்ய வேண்டிய பூஜையாகும்.தீப மந்திரம்(விளக்கை ஏற்றி வைத்து தீபத்தை பார்த்து இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)தீபஜோதி: பரம் ப்ரஹ்மதீபஜ்யோதிர் ஜனார்த்தன:தீபோ மே ஹரது பாபம்தீபஜ்யோதிர் நமோஸ்து தேஆசமனம்(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு  கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி, சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)ஓம் அச்யுதாய நம:ஓம் அனந்தாய நம:ஓம் கோவிந்தாய நம:அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)1. கேச ’வ  வலக்கைக் கட்டைவிரல் வலக்கன்னம்2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்3. மாதவ  வலக்கை மோதிர விரல், வலக்கண்4. கோவிந்த  வலக்கை மோதிரவிரல், இடக்கண்5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி7. த்ரிவிக்ரம  வலக்கை சிறுவிரல், வலது காது8. வாமன வலக்கை சிறுவிரல், இடது காது9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்10. ஹ்ருஷீகேச ’  வலக்கை நடுவிரல், இடதுதோள்11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை.தியானம்வலது கையில் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக்கொண்டு கீழ்க் கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.சு’க்லாம்பரதரம் விஷ்ணும்ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்ப்ரஸன்ன வதனம் த்யாயேத்ஸர்வ விக்னோபசா ’ ந்தயேப்ராணாயாமம்(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்வரேண்யம், பர்க்கோதேவஸ்யதீமஹி, தியோ யோ ந: ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்(வலது காதை தொடவும்.)ஸங்கல்பம்வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக் கொண்டு, இடது கை மேல் வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு அக்ஷதையை வடக்கே போடவும்.மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’ வர ப்ரீத்யர்த்தம், கரிஷ்யமாணஸ்யகர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம்ஆதௌ விக்னேச்’வர பூஜாம் கரிஷ்யேகுறிப்பு: மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கூம்பு வடிவில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.பிரார்த்தனை(மஞ்சள் பிள்ளையாருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி ஆவாஹனம் (விக்னேஸ்வரரை வரவழைத்தல்) செய்து, புஷ்பம், அக்ஷதையை போடவும்.) வேத மந்திரங்களை ஸ்வரத்துடன் சொல்பவர்கள் மட்டுமே கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லவும்.கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹேகவிம் கவீநாம் உபமச்’ரவஸ்தமம்ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதஆந: ச்’ ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம்அஸ்மின் ஹரித்ராபிம்பேவிக்னேச்’ வரம் த்யாயாமி,விக்னேச்’வரம் ஆவாஹயாமி(மற்றவர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லலாம்.)அகஜானன பத்மார்க்கம்கஜானனம் அகர்நிஷம்அனேகதம்தம் பக்தானாம்ஏகதந்தம் உபாஸ்மஹேஅஸ்மின் ஹரித்ராபிம்பே விக்னேச்’வரம்த்யாயாமி, விக்னேச்’வரம் ஆவாஹயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு புஷ்பம், அக்ஷதை போட்டு கீழ்கண்ட மந்திரம் சொல்லி பிள்ளையாரை ஆசனத்தில் அமர்த்தியதாக பாவனை செய்ய வேண்டும்.)விக்னேச்’வராய நம:ஆஸனம் ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாரின் திருவடிகளை அலம்புதல். உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் திருவடிக்கு நேராகக் காட்டி அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)விக்னேச்’ வராய நம:பாத்யம் ஸமர்ப்பயாமி(கீழ்கண்ட மந்திரம் சொல்லி உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் கைகளில் அளிப்பதுபோல பாவனை செய்து தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)விக்னேச்’வராய நம:அர்க்யம் ஸமர்ப்பயாமி(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தெய்வத்தின் வாய்க்கு நேராக காட்டி அர்க்யபாத்திரத்தில் விடவும்.)விக்னேச் ’வராய நம:ஆசமனீயம் ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையார் மீது தீர்த்தத்தை தெளிக்கவும்)விக்னேச் ’ வராய நம:ஸ்நானம் ஸமர்ப்பயாமி(அர்க்யபாத்திரத்தில் ஜலம் விடவும்)விக்னேச் ’வராய நம: ஸ்நாநாநந்தரம்ஆசமனீயம் ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு வஸ்த்ரம் அளிப்பது போல் அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)விக்னேச்’ வராய நம:வஸ்த்ரார்த்தம் அக்ஷதான்ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு பூணூலுக்கு பதிலாக அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)விக்னேச் ’ வராய நம: யக்ஞோபவீதார்த்தம் அக்ஷதான்ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு நெற்றியில் சந்தனம் வைக்கவும்)விக்னேச் ’ வராய நம: கந்தாம்ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமம் வைக்கவும்.)விக்னேச் ’வராய நம: கந்தோபரிகுங்குமம் ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு அக்ஷதையை சமர்ப்பிக்கவும்.)விக்னேச்’வராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கவும்.)விக்னேச்’ வராய நம:புஷ்பை: பூஜயாமிஅர்ச்சனை(மஞ்சள் பிள்ளையாரை பல பெயர்களில் புஷ்பங்களால் அர்ச்சனை செய்யவும்.)ஓம் ஸுமுகாய நம:ஓம் ஏகதந்தாய நம:ஓம் கபிலாய நம:ஓம் கஜகர்ணகாய நம:ஓம் லம்போதராய நம:ஓம் விகடாய நம:ஓம் விக்னராஜாய நம:ஓம் விநாயகாய நம:ஓம் தூமகேதவே நம:ஓம் கணாத்யக்ஷாய நம:ஓம் பாலசந்த்ராய நம:ஓம் கஜானனாய நம:ஓம் வக்ரதுண்டாய நம:ஓம் சூ’ர்ப்ப கர்ணாய நம:ஓம் ஹேரம்பாய நம:ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:ஓம் மஹாகணபதயே நம:நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. (அக்ஷதை, புஷ்பம், போடவும்.)தூபதீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.(அக்ஷதை, புஷ்பம் போடவும்.)நிவேதன மந்த்ரங்கள்(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்து கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)ஓம் பூர்புவஸ்ஸுவ:(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)தத்ஸவிதுர்வரேண்யம்பர்கோதேவஸ்ய தீமஹிதியோ யோ ந: ப்ரசோதயாத்(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)(பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)(காலையில் பூஜை செய்தால்)தேவஸவித: ப்ரஸுவஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி(மாலையில் பூஜை செய்தால்)தேவஸவித: ப்ரஸுவருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமிஅம்ருதமஸ்துஅம்ருதோபஸ்தரணமஸி(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமிக்கு அன்னம் ஊட்டுவது போல் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)ஓம் ப்ராணாய ஸ்வாஹா,ஓம் அபானாய ஸ்வாஹா,ஓம் வ்யாநாய ஸ்வாஹா,ஓம் உதானாய ஸ்வாஹா,ஓம் ஸமானாய ஸ்வாஹா,ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய, விக்னேச்’ வராய நம: நாளீகேர கண்ட த்வயம், கதலீபலம் நிவேதயாமி.மத்யே மத்யே பானீயம்ஸமர்ப்பயாமி.(தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)அம்ருதாபிதாநமஸி(ஆசமனீயம் ஸமர்ப்பயாமி)(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து இரண்டு முறை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)பூகீபல ஸமாயுக்தம்நாகவல்லீ தளைர்யுதம்கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம்தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்விக்னேச் ’ வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி (வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் சிறிதளவு ஜலம் விட்டு நிவேதனம் செய்யவும்.)தீபாராதனைவிக்னேச்’வராய நம:கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி(மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டவும்.)ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி(புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பிக்கவும்.)ப்ராத்தனைவக்ரதுண்ட மஹாகாயஸூர்யகோடி ஸமப்ரபஅவிக்னம் குரு மே தேவஸர்வகார்யேஷு ஸர்வதாவிக்னேச் ’ வராய நம: ப்ரார்த்தயாமி(என்று புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்யவும்)ப்ரார்த்தனைஸுமுகச் சைகதந்தச்ச கபிலோ கஜகர்ணக:/லம்போ தரச்ச விகட: விக்ன ராஜோ விநாயக://தூமகேது: கணாத்யக்ஷ: பால சந்த்ரோ கஜானன:வக்ர துண்ட: சூர்ப்ப கர்ண: ஹேரம்ப: ஸ்கந்த பூர்வஜ://(அக்ஷதையுடன் புஷ்பத்தை விக்னேச்’வரர் பாதத்தில் போட்டு நமஸ்காரம் செய்யவும்.)3. ப்ரதான பூஜைத்யானம்சு’க்லாம்............ சா’ந்தயே சு’க்லாம்பரதரம் விஷ்ணும்ச ’சி’ வர்ணம் சதுர்புஜம்ப்ரஸன்ன வதனம் த்யாயேத்ஸர்வ விக்னோபசா ’ந்தயேஸங்கல்பம்பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்) தமிழ் வருஷங்கள் 601. பிரபவ2. விபவ3. சுக்கில4. பிமோதூத5. பிரஜோத்பத்தி6. ஆங்கிரஸ7. ஸ்ரீமுக8. பவ9. யுவ10. தாது11. ஈஸ்வர12. வெகுதான்ய13. பிரமாதி14. விக்கிரம15. விஷு16. சித்ரபானு17. சுபானு18. தாரண19. பார்த்திப20. விய21. சர்வஜித்து22. சர்வதாரி23. விரோதி24. விக்ருதி25. கர26. நந்தன27. விஜய28. மன்மத30. துர்முகி31. ஏவிளம்பி32. விளம்பி33. விகாரி34. சார்வரி35. பிலவ36  சுபகிருது37. சோபகிருது38. குரோதி39. விசுவாவசு40. பராபவ41. பிலவங்க42. கீலக43. சௌமிய44. சாதாரண45. விரோதிகிருது46. பரிதாபி47. பிரமாதீச48. ஆனந்த49. ராக்ஷஸ50. நள51. பிங்கள52. காளயுக்தி53. சித்தார்த்தி54. ரௌத்திரி55. துன்மதி56. துந்துபி57. ருத்ரோக்காரி58. ரக்தாக்ஷி59. குரோதன60. அக்ஷய..... அயனே (உத்தராயணே   தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே  ஆடி முதல் மார்கழி வரை)......ருதௌ ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6தமிழ் மாதங்கள்         ருதுக்கள்1. சித்திரையும், வைகாசியும்  : வஸந்த ருது2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது....... மாஸேதமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்தமிழ் மாதங்கள்         ஸம்ஸ்க்ருத பெயர்கள்1. சித்திரை    1. மேஷம்2. வைகாசி    2. ரிஷபம்3. ஆனி    3. மிதுனம்4. ஆடி     4. கடகம்5. ஆவணி     5. சிம்மம்6. புரட்டாசி    6. கன்னி7. ஐப்பசி     7. துலாம்8. கார்த்திகை    8. விருச்’சிகம்9. மார்கழி     9. தனுஸு10. தை    10. மகரம்11. மாசி     11. கும்பம்12. பங்குனி    12. மீனம் ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.திதிகள்: 151. பிரதமை2. துவிதியை3. திருதியை4. சதுர்த்தி5. பஞ்சமி6. சஷ்டி7. சப்தமி8. அஷ்டமி9. நவமி10. தசமி11. ஏகாதசி12. துவாதசி13. திரயோதசி14. சதுர்த்தசி15. பவுர்ணமி அல்லது அமாவாசை..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்)........சு’ப்திதௌ திதிகள் : 151. பிரதமை2. துவிதியை3. திருதியை4. சதுர்த்தி5. பஞ்சமி6. சஷ்டி7. சப்தமி8. அஷ்டமி9. நவமி10. தசமி11. ஏகாதசி12. துவாதசி13. திரயோதசி14. சதுர்த்தசி15. பவுர்ணமி அல்லது அமாவாசை.........வாஸர யுக்தாயாம் தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்தமிழ்நாட்கள்        ஸம்ஸ்க்ருத பெயர்கள்1. ஞாயிற்றுக்கிழமை    : பானுவாஸரம்2. திங்கட்கிழமை    : இந்துவாஸரம்3. செவ்வாய்க்கிழமை    : பௌமவாஸரம்4. புதன்கிழமை        : ஸௌம்யவாஸரம்5. வியாழக்கிழமை    : குருவாஸரம்6. வெள்ளிக்கிழமை    : பிருகுவாஸரம்7. சனிக்கிழமை        : ஸ்திரவாஸரம்........நக்ஷத்ர யுக்தாயாம் நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்நக்ஷத்திர பெயர்கள்    ஸம்ஸ்க்ருத பெயர்கள்1. அஸ்வினி         அஸ்வினீ2. பரணி        அபபரணி3. கார்த்திகை         க்ருத்திகா4. ரோகிணி         ரோஹிணி5. மிருகசீர்ஷம்         ம்ருகசீர்ஷ6. திருவாதிரை / ஆருத்ரா      ஆர்த்ரா7. புனர்பூசம்         புனர்வஸு8. பூசம்         புஷ்ய9. ஆயில்யம்         ஆஸ்லேஷா10. மகம்         மக11. பூரம்         பூர்வ பல்குனி12. உத்திரம்         உத்தர பல்குனி13. அஸ்தம்         ஹஸ்தசு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்...... கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),... நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, .... (பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)நாமதேயஸ்யஅடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.மமோபாத்த, ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம், சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ச்’வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிகும்ச ’திதமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, தண்டகாரண்யே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே, பிரபவாதீனாம் ஷஷ்டியா: ஸம்வத்ஸராணாம் மத்யே, *....நாம ஸம்வத்ஸரே, *......அயனே, *.....ருதௌ, *......மாஸே, *.......பக்ஷே, *.......சு’பதிதௌ, ப்ருகுவாஸர யுக்தாயம், *......நக்ஷத்ரயுக்தாயாம், சு’பநக்ஷத்திர, சு’பயோக, சு’பகரண, ஏவங்குண, ஸகல விசே’ஷண விசி’ஷ்டாயாம், அஸ்யாம் சு’பதிதௌ.மம ஸஹகுடும்பானாம் சேஷமஸ்த்தைர்ய, வீர்யவிஜய, ஆயுராரோக்ய ஐச்’வர்யாணாம் அபிவ்ருத்யர்த்தம், உசித காலே ஆயஷ்மத் ஸ்வரூப ஸுகுணானேக ஸுபுத்ர அவாப்த்யர்த்தம், தீர்க்க ஸௌமங்கல்ய அவாப்த்யர்த்தம், அரோக த்ருடகாத்ரதா ஸித்யர்த்தம், மஹாலக்ஷ்மீ ப்ரஸாத ஸித்யர்த்தம், யதாச’க்தி த்யான ஆவாஹனாதி ஷோடசோ’பசாரை: மஹாலக்ஷ்மீ பூஜாம் கரிஷ்யே/ ததங்கம் கலச பூஜாம் ச கரிஷ்யே//அக்ஷதையை வடக்கு புறம் கீழே போட்டு கை அலம்பவும்.விக்னேச்’வர உத்யாபனம்(யதாஸ்தானம்)அகஜானன............உபாஸ்மஹேஅகஜானன பத்மார்க்கம்கஜானனம் அகர்நிஷம்அனேகதம்தம் பக்தானாம்ஏகதந்தம் உபாஸ்மஹே“விக்னேச்’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி,சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ”(என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)ஆசம்ய, அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:(உத்தரணியால் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டு ஒவ்வொரு மந்திரம் சொல்லி சாப்பிடவும்.)கண்டா பூஜை(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.ஆகமார்த்தம் து தேவானாம்கமநார்த்தம் து ரக்ஷஸாம்கண்டாரவம் கரோம்யாதௌதேவதாஹ்வான லாஞ்ச்சனம்10. கலச ’ பூஜைஇந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமிகீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமிபிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.ஓம் கங்காயை நம:ஓம் யமுனாயை நம:ஓம் கோதாவர்யை நம:ஓம் ஸரஸ்வத்யை நம:ஓம் நர்மதாயை நம:ஓம் ஸிந்தவே நம:ஓம் காவேர்யை நம:ஓம் ஸரஸ்வத்யை நம:ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமிபிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.கலச ’ ச்’ லோகம்கலச ’ஸ்ய முகே விஷ்ணு:கண்டே ருத்ர: ஸமாச்’ரித:மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மாமத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:குக்ஷௌ து ஸாகரா: ஸர்வேஸப்தத்வீபா வஸுந்தராருக்வேதோ (அ)த யஜுர்வேத:ஸாமவேதோ (அ) ப்யதர்வண:அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வேகலசா ’ம்பு ஸமாச்’ரிதா:ஆயாந்து தேவபூஜார்த்தம்துரிதக்ஷயகாரகா:கங்கே ச யமுனே சைவகோதாவரி ஸரஸ்வதிநர்மதே ஸிந்து காவேரிஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குருஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.ஸமஸ்த உபசார பூஜைகள்அக்ஷதையையும் புஷ்பத்தையும் எடுத்துக்கொள்ளவும்.பத்மாஸனாம் பத்மகராம் பத்மமாலா விபூஷிதாம்க்ஷீரஸாகர ஸம்பூதாம் க்ஷீரவர்ண ஸமப்ரபாம்/க்ஷீரவர்ண ஸமம் வஸ்த்ரம் ததானாம் ஹரிவல்லபாம்பாவயே பக்தியோகேன (கலசே’) பிம்பேஅஸ்மின் ஸுமனோஹரே//“அஸ்மின் (கலசே’) பிம்பே மஹாலக்ஷ்மீம் த்யாயாமி”(என்று சொல்லி மஹாலக்ஷ்மி (கலசத்தின்) பிம்பத்தின்பேரில் அக்ஷதையையும் புஷ்பத்தையும் போடவும்.)ஸர்வமங்கள மாங்கல்யே விஷ்ணுவக்ஷஸ்தலாலயே/ஆவாஹயாமி தேவித்வாம் அபீஷ்ட பலதாபவ//அஸ்மின் (கலசே ’) பிம்பே மஹாலக்ஷ்மீம் ஆவாஹயாமி(என்று சொல்லி பிம்பத்தின் / கலசத்தின் பேரில் அக்ஷதை போடவும்.)அனேக ரத்ன ஸஹிதம் க்ஷீரஸாகர ஸம்பவே/ஸ்வர்ண ஸிம்மாஸனம் தேவி ஸ்வீகுருஷ்வ ஹரிப்ரியே/மஹாலக்ஷ்ம்யை நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி(அக்ஷதை போடவும்)கங்காதி ஸரிதாநீதம் கந்த புஷ்பஸமன்விதம்/பாத்யம் ததாமி தே தேவி ப்ரஸீத பரமேச்’வரி//மஹாலக்ஷ்ம்யை நம: பாத்யம் ஸமர்ப்பயாமி(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)கங்காநதி ஸமாநீதம் ஸுவர்ண கலச ’ஸ்திதம்/க்ருஹாணார்க்யம் மயாதத்தம் புத்ரபௌத்ர பலப்ரதே//மஹாலக்ஷ்ம்யை நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)ப்ரஸன்னம் சீ’தலம் தோயம் ப்ரஸன்ன முகபங்கஜே/க்ருஹாணாசமனார்த்தாய கருடத்வஜ வல்லபே//மஹாலக்ஷ்ம்யை நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)மஹாலக்ஷ்மி மஹாதேவி மத்வாஜ்ய ததிஸம்யுதம்/மதுபர்க்கம் க்ருஹாணேதம் மதுஸூதன வல்லபேமஹாலக்ஷ்ம்யை நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி(புஷ்பத்தால்  தீர்த்தம், பசும்பால் தெளிக்கவும்)பயோததி க்ருதைர் யுக்தம் ச’ர்கரா மதுஸம்யுதம்/பஞ்சாமிருதம் க்ருஹாணேதம் மஹாலக்ஷ்மி நமோஸ்துதே//மஹாலக்ஷ்ம்யை நம: பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி(புஷ்பத்தால் பழம், சர்க்கரை, தேன், பால், நெய் இவைகளைக் கலந்து (கலசத்தின்) பிம்பத்தின் மீது தெளிக்கவும்)ஹேமகும்பஸ்த்திதம் ஸ்வச்சம் கங்காதி ஸரிதா ஹ்ருதம்/ஸ்னானார்த்தம் ஸலிலம் தேவி க்ருஹ்யதாம் ஸாகராத்மஜே//மஹாலக்ஷ்ம்யை நம: ஸ்நானம் ஸமர்ப்பயாமி(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)ஸ்நானானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி//(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)திவ்யாம்பரயுகம் ஸூக்ஷ்மம் கஞ்சுகஞ்ச மனோஹரம்/மஹாலக்ஷ்மி மஹாதேவி க்ருஹாணேதம் மயார்பிதம்//மஹாலக்ஷ்ம்யை நம: வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி(வஸ்திரம் அணிவிக்கவும்.)மாங்கல்ய மணி ஸம்யுக்தம் முக்தா வித்ருமஸம்யுதம்/தத்தம் மங்கள ஸூத்ரஞ்ச க்ருஹாண ஹரிவல்லபே//மஹாலக்ஷ்ம்யை நம: கண்டஸூத்ரம் ஸமர்ப்பயாமி(பஞ்சினால் செய்யப்பட்ட மாலை ஸமர்ப்பிக்கவும்)ரத்ன தாடங்க கேயூரஹார கங்கண பூஷிதே/பூஷணானி மஹார்ஹாணி க்ருஹாண கருணானிதே//மஹாலக்ஷ்ம்யை நம: ஆபரணானி ஸமர்ப்பயாமி(ஆபரணம் அணிவிக்கவும்.)கர்ப்பூர சந்தனோபேதம் கஸ்தூரீ குங்குமான்விதம்/ஸர்வ கந்தம் க்ருஹாணாத்ய ஸர்வ மங்கள தாயினி//மஹாலக்ஷ்ம்யை நம: கந்தான் தாரயாமி(சந்தனமிடவும்.)ஹரித்ராகுங்குமசூர்ணம் ஸமர்ப்பயாமி(குங்குமம் இடவும்)ஸாலிஜாதான் சந்த்ரவர்ணான் ஸ்நிக்தமௌத்திக ஸன்னிபான்/அக்ஷதான் தேவி க்ருஹ்ணீஷ்வ பங்கஜாக்ஷஸ்ய வல்லபே//மஹாலக்ஷ்ம்யை நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி(அக்ஷதை போடவும்)மந்தார பாரிஜாதாப்ஜை: கேதக்யுத்பல பாடலை:மல்லிகாஜாதி வகுளை: புஷ்பைஸ்த்வாம் பூஜயாம்யஹம்//மஹாலக்ஷ்ம்யை நம: புஷ்பாணி ஸமர்ப்பயாமி(புஷ்பம் அல்லது மாலை ஸமர்ப்பிக்கவும்)அங்க பூஜைமஹாலக்ஷ்ம்யை        நம: பாதௌ        பூஜயாமி (கால்)வரலக்ஷ்ம்யை        நம: குல்பௌ        பூஜயாமி (கணுக்கால்)இந்திராயை        நம: ஜங்கே        பூஜயாமி (முழங்கால்)சண்டிகாயை        நம: ஜானுனீ         பூஜயாமி (முட்டி)க்ஷீராப்தி தனயாயை    நம: ஊரு        பூஜயாமி (தொடை)பீதாம்பரதாரிண்யை    நம: கடிம்        பூஜயாமி (இடுப்பு)ஸாகரஸம்பவாயை    நம: குஹ்யம்        பூஜயாமி (மர்மம்)நாராயணப்ரியாயை    நம: நாபீம்        பூஜயாமி (தொப்புள்)ஜகத்குக்ஷ்யை        நம: குக்ஷிம்        பூஜயாமி (வயிறு)விச்’வஜனன்யை        நம: வக்ஷ:        பூஜயாமி (மார்பு)ஸுஸ்தன்யை        நம: ஸ்தனௌ        பூஜயாமி (மார்பகம்)கம்புகண்ட்யை        நம: கண்டம்        பூஜயாமி (கழுத்து)ஸுந்தர்யை        நம: ஸ்கந்தௌ        பூஜயாமி (தோள்)பத்மஹஸ்தாயை        நம: ஹஸ்தான்        பூஜயாமி (கைகள்)பஹுப்ரதாயை        நம: பாஹூன்        பூஜயாமி (புஜதண்டம்)சந்த்ரவதனாயை        நம: வக்த்ரம்        பூஜயாமி (வாய்)சஞ்சலாயை        நம: ஸுமுகம்        பூஜயாமி (முகம்)பிம்போஷ்ட்யை        நம: ஓஷ்டம்        பூஜயாமி (முகவாய்)அனகாயை        நம: அதரம்        பூஜயாமி (உதடு)இந்தீவராக்ஷ்யை        நம: நேத்ரே        பூஜயாமி (கண்கள்)ஸுனாஸாயை        நம: நாஸிகாம்        பூஜயாமி (மூக்கு)ரத்ன குண்டல தாரிண்யை    நம: கர்ணௌ        பூஜயாமி (காதுகள்)ஸுகபோலாயை        நம: கபோலௌ        பூஜயாமி (தலை)பலப்ரதாயை        நம: பாலம்        பூஜயாமி (நெற்றி)நீலாலகாயை        நம: அலகான்        பூஜயாமி (வாய்)சி’வாயை        நம: சி’ர:        பூஜயாமி (தலை)ஸர்வமங்களாயை    நம: ஸர்வாண்யங்கானி     பூஜயாமி (முழுவதும்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !