உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 10,008 லட்டுகளிலான தேரில் அன்னபூரணிக்கு சிறப்பு பூஜை

10,008 லட்டுகளிலான தேரில் அன்னபூரணிக்கு சிறப்பு பூஜை

சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை, ஸ்ரீ ஹரிஹர தேவாலயத்தில், தீபாவளியான நேற்று, 10,008 எட்டு லட்டுகளிலான தேரில், அன்னபூரணிக்கு நடந்த சிறப்பு பூஜையில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.காசியில் அன்னபூரணிக்கு, தீபாவளி நாளில் நடக்கும் லட்டு தேர் தரிசனம் போன்று சேலம், ஸ்ரீ சாஸ்தா சேவா சமிதி நித்ய அன்னபூரணி டிரஸ்ட் சார்பில், ஆண்டுதோறும், 10,008 வண்ண வண்ண லட்டுகளை கொண்டு தேர் அலங்கரிக்கப்பட்டு, அதில் அன்னபூரணிக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தேருக்கான லட்டு தயார் செய்யும் பணிகள், நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை மரத்தேரில் மஞ்சள், பச்சை, சிவப்பு உட்பட பல்வேறு வண்ண லட்டுகளால் அலங்கரிக்கப்பட்டது. லட்டு தரிசனத்தை முன்னிட்டு, கோவிலில் உள்ள ஹரிஹரர், நவக்கிரகங்கள், விநாயகர், முருகன் என அனைத்து தெய்வங்களுக்கும், தங்க கவச சாத்துபடியில் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை, அன்னபூரணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. அன்னபூரணியை தரிசனம் செய்த பக்தர்களுக்கு, பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !