அரங்கநாதர் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு
ADDED :2586 days ago
காரமடை: காரமடை அரங்கநாதர் கோவிலில், சனிக்கிழமை தோறும், ஆன்மிக தொடர் சொற்பொழிவு நடைபெறுகிறது. இதுவரை, 165 வாரங்கள், திருவரங்கநாதன் திருவருள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டுள்ளது.சிறுமுகை விஜயலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் நரசிம்ம சுப்பிரமணியன் இந்த ஆன்மீக சொற்பொழிவவை நிகழ்த்தி வருகிறார். இதில் அறிவியல் கலந்த ஆன்மிக கருத்துக்கள் நிறைந்த கதைகள், சம்பவங்கள் ஆகியவற்றை சொல்லும் விதம் பார்வையாளர்களின் மனதை கவர்ந்துள்ளது.கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில் எஸ்.வி.டி., அறக்கட்டளை நிர்வாகி சக்திவேல், பேச்சாளர் மணியன், தமிழாசிரியர் அரங்கசாமி, அமரகவி, ராஜேந்திரன் உள்பட பலர் பேசினர். ஆசிரியர் அரங்கப்பன் நன்றி கூறினார்.