உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மவுனகுரு சுவாமி கோயிலில் தீபாவளி சிறப்பு பூஜை

மவுனகுரு சுவாமி கோயிலில் தீபாவளி சிறப்பு பூஜை

கன்னிவாடி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், 30 வகை திரவிய அபிேஷகம் நடந்தது. ராஜ அலங்காரத்துடன், மூலவர், உற்சவர், நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தேவார, திருவாசக பாராயணம், ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அம்பாத்துறை ரோடு ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு திரவிய அபிேஷகத்துடன், வெண்ணைய் காப்பு, துளசி மாலை அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கன்னிவாடி:தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், வெல்லம்பட்டி ராமலிங்கசுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், குட்டத்துப்பட்டி ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், வெல்லம்பட்டி மணி சித்தர் பீடத்தில் ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !