உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி கோயில்களில் தீபாவளி சிறப்பு பூஜைகள்

தேனி கோயில்களில் தீபாவளி சிறப்பு பூஜைகள்

 தேனி: தீபாவளி பண்டிகை தினமான நேற்று தேனி நகரில் உள்ள பெத்தாட்சி விநாயகர் கோயில், மீனாட்சி சுந்தரரேஸ்வர் கோயில், பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயில், கணேச கந்த பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திரளான மக்கள் பங்கேற்றனர்.

பெரியகுளம்: * பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர்களான வரதராஜப்பெருமாள், ஸ்ரீதேவி தாயார் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.

* பாலசுப்பிரமணியர் கோயில் மூலவர்களான பாலசுப்பிரமணியர், அறம்வளர்த்த நாயகி, ராஜேந்திர சோழீஸ்வரர் உட்பட உபதெய்வங்கள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மீனாட்சியம்மன் கோயில், கைலாசபட்டி கைலாசாநார் கோயில், கம்பம்ரோடு காளியம்மன் கோயில், பாம்பாற்று ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

* ஷீரடி சாய்பாபா கோயிலில், சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.பிரசாதம் வழங்கப்பட்டது.
* லட்சுமிபுரம் லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

போடி: சீனிவாசப் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சியர் செய்திருந்தார்.

* மேலச்சொக்கநாதபுரத்தில் தொட்டராயர் ஒன்னம்மாள் கோயிலில் சிறப்பு பூஜை,அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. தொட்டராயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

* சிலமலை சீனிவாசப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் பங்கேற்றனர்.

* பிச்சாங்கரையில் உள்ள கீழச்சொக்கநாதர், மேலச்சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயில்களில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜைகளும், போடி சுப்பிரமணியர் கோயிலில் முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் ஆராதனைகளும் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !