உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை கோயிலில் துப்பாக்கி போலீசார் பாதுகாப்பு

உத்தரகோசமங்கை கோயிலில் துப்பாக்கி போலீசார் பாதுகாப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம்ங அருகே உத்தரகோசமங்கை மரகதநடராஜர் சிலை கொள்ளை முயற்சி நடந்த இடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி சமேத மங்களநாத சுவாமி கோயிலில் மரகத நடராஜர் சன்னிதி உள்ளது.

இங்குள்ள  பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத நடராஜர் சிலையை கொள்ளையடிக்க  நவ., 4ல் முயற்சி நடந்தது. எச்சரிக்கை மணி ஒலித்ததால், காவலர் செல்லமுத்துவை தாக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பினர். ஐ.ஜி., உத்தரவு: கோயில் பாதுகாப்பு குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், டி.ஐ.ஜி., காமினி நேற்று முன் தினம் ஆய்வு செய்து கோயில் பாதுகாப்பு உபகரணங்களை நவீனப்படுத்த அறிவுறுத்தினார். இதற்கு இரு மாத கால அவகாசம் வேண்டும் என்பதால், அதுவரை துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உத்தரவிட்டார்.

பாதுகாப்பு: ராமநாதபுரம் ஆயுதப்படையில் இருந்து இயந்திர துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவரும், அவருடன் கூடுதலாக இரு போலீசாரும் இரவு 8:00 முதல் காலை 6:00 மணி வரை மரகத நடராஜர் சன்னதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !