சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் அமாவாசை திருவிழா
ADDED :2623 days ago
சங்கராபுரம்:சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் அமாவாசை திருவிழா நடந்தது. தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசை திருவிழாவையொட்டி, பெரியநாயகி அம்மனுக்கு விஷேச, அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி, தீ சட்டி ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை தேவபாண்டலம் பருவதராஜகுலத்தினர் செய்திருந்தனர்.