உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மின் விளக்கால் ஜொலிக்கும் திருவண்ணாமலை கோவில் கோபுரங்கள்

மின் விளக்கால் ஜொலிக்கும் திருவண்ணாமலை கோவில் கோபுரங்கள்

திருவண்ணாமலை: தீப திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலின், ஒன்பது கோபுரங்களும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலித்தன. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வரும், 14ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பத்து நாட்கள் தொடர்ந்து நடக்கும் விழாவில், 20ல், பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர், ஆகியோர் தனித்தனி ரதத்தில், வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். வரும், 23ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோவிலில் உள்ள, ஒன்பது கோபுரங்களும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !