புதுச்சேரி பாலசுப்ரமணியர் கோவிலில், கந்த சஷ்டி விழா
ADDED :2524 days ago
புதுச்சேரி:ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில், 66ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார திருக்கல்யாண விழாவை முன்னிட்டு, நாளை (11ம் தேதி) யானை முகன் சம்ஹாரம் நடக்கிறது.
கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் 66ம் ஆண்டு கந்தர் சஷ்டி விழா கடந்த 7ம் தேதி, விநாயகர் பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் (நவம்., 8ல்) சஷ்டி பூஜைகள் நடந்தது. நாளை யானை முகன் சம்ஹாரமும், திங்கள்கிழமை வேல் வாங்குதல், சிங்கமுக சம்ஹாரம் நடக்கிறது. 13 ம் தேதியன்று பாலசுப்ரமணிய சுவாமி திருத்தேரும், இரவு சூரசம்ஹார பெருவிழா நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை பரிபாலகர் காதர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.