காஞ்சிபுரம் அகத்தீஸ்வரர் கோவில் கோவில்களில் கும்பாபிஷேகம்
ADDED :2524 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில், பழமையான அறம்வளர்நாயகி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் சிதிலமடைந்து இருந்தது. கிராம மக்கள் மற்றும் சிவ பக்தர்கள் நன்கொடையுடன் கோவில் புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி, நேற்று (நவம்., 9ல்) யாக சாலை பூஜை துவங்கியது. இன்று, மூன்றாம் கால யாக பூஜை நடைபெறுகிறது. நாளை காலை, 9:30 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, மஹா கும்பாபிஷேகம் மற்றும் மஹா அபிஷேகம் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள, பால தர்ம சாஸ்தா சன்னிதியில், இன்று (நவம்., 10ல்) காலை, மஹா கணபதி ஹோமம் நடைபெறுகிறது.கும்பாபிஷேக தினமான நாளை காலை, 11:00 மணிக்கு, மஹா கும்பாபிஷேகமும், அதனைத் தொடர்ந்து, பால தர்ம சாஸ்தா வீதியுலா நடைபெறுகிறது.