மணிமங்கலத்தில் உள்ள, சிவசண்முக நாதருக்கு அலங்காரம்
ADDED :2579 days ago
மணிமங்கலம்: மணிமங்கலத்தில் உள்ள, சிவசண்முக நாதருக்கு, தினம் ஒரு படை வீடு அலங்காரம்செய்யப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே மணிமங்கலம் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கைலாச நாதர் கோவில் உள்ளது. சிதிலமடைந்து காணப்பட்ட இந்த கோவில், ஐந்தாண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது.கோவில் வளாகத்தில் சிவசண்முக நாதர் சன்னிதி புதிதாக கட்டப்பட்டு, கும்பாபிஷேகம், 4ம் தேதி நடந்தது.ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய இடங்களில் உள்ள முருகரை போல, தினம் ஒரு அலங்காரம் செய்யப்படுகிறது.கந்த சஷ்டியை முன்னிட்டு, இந்த அலங்காரம் நடைபெறுகிறது.