உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருளில் திருப்பரங்குன்றம் கிரிவல பாதை சஷ்டி பக்தர்கள் அச்சம்

இருளில் திருப்பரங்குன்றம் கிரிவல பாதை சஷ்டி பக்தர்கள் அச்சம்

திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் தெரு விளக்குகள் எரியாததால் சஷ்டி பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். கோயில் சஷ்டி திருவிழாவை முன்னிட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் காப்புகட்டி கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்கின்றனர். அவர்கள் தினமும் அதிகாலை, மாலையில் சரவணப் பொய்கையில் நீராடி கிரிவலம் செல்கின்றனர். கிரிவல ரோட்டில் அவனியாபுரம் பிரிவிலிருந்து கல்வெட்டு குகைக் கோயில் வரையிலான பகுதியிலுள்ள தெருவிளக்குகள் 15 நாட்களாக எரியாததால் இருட்டாக உள்ளது. கிரிவலம் செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். கோயில் சார்பில் மாநகராட்சிக்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !