உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்லியனூரில் மழை வேண்டி சிறப்பு ஹோமம்

வில்லியனூரில் மழை வேண்டி சிறப்பு ஹோமம்

வில்லியனூர்:வில்லியனூர் அருகே, நாட்டில் மழை வேண்டியும், அமைதி கிடைக்கவும் ஏகதின லட்சுமி ஆவர்த்தி தத்தாத்திரேய அபூர்வ பீஜமந்திர ஹோமம்நடந்தது.வில்லியனூர்
அருகே மங்கலம் ரோட்டில் சங்கராபரணி ஆறு தென்கரையோரம் உள்ள கணபதி சச்சிதானந்த ஆசிரமத்தில், மழை வேண்டியும், அமைதி கிடைக்கவும் மற்றும் புதுச்சேரியில் வாழ் மக்களின் நன்மை கருதி ஆவர்த்தி அபூர்வ பீஜ மந்திர ஹோமம் நடந்தது.இந்த சிறப்பு ஹோமத்தில் 50க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்களை கலந்து கொண்டு பிரத்யேக திரவியங்களை கொண்டு ஹோமம் நடத்தினர். இந்த யாகத்துடன் ஸர்வ மங்களங்களையும் அருளும் தத்தாத்திரேயரால் கடைபிடிக்கப்பட்ட அனகலட்சுமி விரத பூஜை நடந்தது. இந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர் கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை டிரஸ்ட் அறங்காவலர்கள் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !