காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு பேட்டரி கார்
ADDED :2527 days ago
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் வயதான, நடக்க முடியாத பக்தர்கள், கோவிலை சுற்றி வர, பேட்டரி கார் வசதியை, இந்தியன் வங்கி வழங்கியுள்ளது. வங்கியின் நிர்வாக இயக்குனர், பத்மஜா, இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, கோவில் ஸ்ரீகாரியத்திடம் காரை ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில், மண்டல மேலாளர், விஜய லட்சுமி, கோவில் செயல் அலுவலர், தியாக ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.