உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிற்றம்பாக்கம் பச்சைமலையம்மர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

சிற்றம்பாக்கம் பச்சைமலையம்மர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

சிற்றம்பாக்கம்: கடம்பத்தூர் ஒன்றியம், சிற்றம்பாக்கம் ஊராட்சியில் உள்ளது மன்னார் சாமியார் பச்சைமலையம்மர் கோவில்.இந்த கோவிலில், மூன்று நிலை ராஜகோபுர மகா கும்பாபிஷேகம் நேற்று (நவம்., 11ல்) நடந்தது.

முன்னதாக, நேற்று முன்தினம் (நவம்., 10ல்)மாலை, விநாயகர் வழிபாடு, மகா கணபதி ஹோமத்துடன், கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கின.

இரவு, 8:00 மணிக்கு, கோபுர  கலச பிரதிஷ்டை நடந்தது. கும்பாபிஷேக நாளான நேற்று (நவம். 11ல்), காலை, 6:00 மணிக்கு, நாடி சந்தானமும், காலை, 7:00 மணிக்கு விசேஷ திரவிய ஹோம மும், அதை தொடர்ந்து, மகாபூர்ணாஹூதியும், கலச புறப்பாடும் நடந்தது.

பின், காலை, 10:00 மணிக்கு, கோபுர விமான கும்பாபிஷேகமும், தொடர்ந்து மகா அபிஷேக மும், மகா தீபாராதனையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !