திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில்மணவாள மாமுனிகள் விழா
ADDED :2579 days ago
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நடந்துவரும் மணவாள மாமுனிகள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (நவம்., 11ல்) சிறப்பு திருமஞ்சனம்
நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கடந்த 1ம் தேதி மணவாள மாமுனிகள் உற்சவம் துவங்கியது. விழாவின் பத்தாம் நாளான நேற்று (நவம்., 11ல்) நிறைவு விழா நடந்தது.
காலை 5:30 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 6:00 மணிக்கு, திருவாராதன பூஜைகள், 8:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் வீதியுலா நடந்தது.
தொடர்ந்து மணவள மாமுனிகள் மங்களாசாசனம். ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் மணவாள மாமுனிகள் சன்னதியில் எழுந்தருளி, மணவாள மாமுனிகள், ராமானுஜருடன் மகா திருமஞ்சனம், நான்காயிர திவ்யபிரபந்த சாற்றுமறை, தீபாராதனை
நடந்தது.