உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை நாளை (நவம்., 13ல்) சூரசம்ஹாரம் ஏற்பாடுகள் தீவிரம்

உடுமலை நாளை (நவம்., 13ல்) சூரசம்ஹாரம் ஏற்பாடுகள் தீவிரம்

உடுமலை:உடுமலை, சுற்றுப்பகுதி கோவில்களில், நாளை (நவம்., 13ல்)சூரசம்ஹார விழா நடக்கிறது.தேவர்களை மீட்க, சூரனை வதம் செய்யும் சுப்ரமணிய சுவாமிகளின் சூரசம்ஹார விழா கோவில்களில் நாளை13ல், நடக்கிறது. உடுமலை, சுற்றுப்பகுதி கோவில்களில், இவ்விழா, கடந்த 8ம் தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.தினமும், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிகளுக்கு, காலை மற்றும் மாலையில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடக்கிறது. நாளை, பிரசன்ன விநாயகர் கோவிலில், மாலை, 4:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.

மடத்துக்குளம் பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி கோவிலில், நாளை 13ல், காலை, சண்முகார்ச் சனை, மதியம், சஷ்டி விரதமுள்ள பக்தர்கள் வாழைத்தண்டு படைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, சூரசம்ஹார உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !