திருப்புத்தூர் நெடுமரம் கோயிலில் இன்று (நவம்., 14ல்) கும்பாபிஷேகம்
ADDED :2622 days ago
திருப்புத்தூர்:திருப்புத்தூர் அருகே நெடுமரத்தில் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில் இன்று (நவம்., 14ல்) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு பின் தற்போது திருப்பணி நடந்துள்ளது.
லட்சுமி நாராயண பெருமாள், லட்சுமி ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார் சன்னதிகளுக்கு திருப்பணி நடந்து நவ.12 ல் யாகசாலை பூஜைகள் அதிகாலை 5:00 மணிக்கு துவங்கியது. நேற்று (நவம்., 13ல்) காலை மகா கும்ப ஸ்தாபனமும், மாலையில் 49 கலச மற்றும் நவகலச அபிஷேகமும் நடந்தது.
பின்னர் கும்ப மண்டல ஆராதனம் நடந்தது. கிராமத்தினர் பங்கேற்றனர். இன்று (நவம்., 14ல்) காலை 6:00 மணி முதல் கும்ப மண்டல திருவாராதனம்,ஹோமங்கள் நடைபெற்று காலை 9:30 மணிக்கு கும்பங்கள் புறப்பாடாகி காலை 10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.