/
கோயில்கள் செய்திகள் / கடவுளை வழிபடும் போது அமைதியாக தியானிப்பது, பஜனை பாட்டு என்று ஆரவாரிப்பது எது பலன் தரும்?
கடவுளை வழிபடும் போது அமைதியாக தியானிப்பது, பஜனை பாட்டு என்று ஆரவாரிப்பது எது பலன் தரும்?
ADDED :5016 days ago
நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சனநீர் பூசை செய்ய வாராய் பராபரமே என்று தாயுமானவர் பராபரக்கண்ணியில் மனக்கோயிலில் சிவனை பூஜிக்கிறார். கொட்டு ஆட்டு பாட்டாகி நின்றாய் போற்றி என்று திருமுறைகள் ஆட்டம் பாட்டமும் ஆண்டவனும் வேறு வேறல்ல என்று சிவனைக் குறிப்பிடுகிறது. இரண்டுமே பலன் தரும். உங்களின் விருப்பத்தைப் பொறுத்து வழிபடலாம்.