உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் கடை ஞாயிறு துவக்கம்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் கடை ஞாயிறு துவக்கம்

காஞ்சிபுரம்: கச்­ச­பேஸ்­வ­ரர் கோவி­லில், கடை ஞாயிறு விழா, நேற்று துவங்­கி­யது. காஞ்­சி­பு­ரம், கச்­ச­பேஸ்­வ­ரர் கோவி­லில், கார்த்­திகை மாத ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில், பக்­தர்­கள், தங்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள நோய்­களை தீர்ப்­ப­தற்­காக, கோவி­லில் நேர்த்தி கடன் செலுத்­து­வர். மண் சட்­டி­யில் தேங்­காய், பழம் வைத்து, மாவி­ளக்கு ஏற்றி, சுவா­மியை வழி­ப­டு­வது வழக்­கம். இதை கடை ஞாயிறு விழா என்­பர். இந்த விழா, நேற்று துவங்­கி­யது. அடுத்து வரும் மூன்று ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளி­லும், பக்­தர்­கள் வழி­பாடு நடை­பெ­றும். சிறு­வர்­கள் முதல் பெரி­ய­வர்­கள் வரை, ஏரா­ள­மான பக்­தர்­கள் நேற்று பங்­கேற்று, சுவா­மியை வழி­பட்­ட­னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !