உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கல்பட்டு அய்யப்பன் கோவிலில் மங்கல இசையுடன், மண்டல பூஜை

செங்கல்பட்டு அய்யப்பன் கோவிலில் மங்கல இசையுடன், மண்டல பூஜை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, நத்தம், புறவழிச்சாலையில், அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், கார்த்திகை மாதம் 1ம் தேதி, மண்டல பூஜை தொடங்கி, தை மாதம் வரை நடைபெறும். இந்த ஆண்டு, நேற்று (நவம்., 18ல்), அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கல இசையுடன், மண்டல பூஜை துவங்கி, அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன்பின், நகரச் சுற்றியுள்ள அய்யப்ப பக்தர்கள், மாலை அணிந்து கொண்டனர். இங்கு, தினமும். சுவாமி தரிசனம் செய்து, மாலை அணிந்து கொள்வர்கள். அதைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் 18ம் தேதியிலிருந்து, 23ம் தேதி வரை, அய்யப்ப சுவாமிக்கு, லட்சார்ச்சனை மற்றும் ஆறாட்டு விழா நடைபெறுகிறது.

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரியில், மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்குள்ள, வளாகத்தில். தர்மசாஸ்தா சன்னதி உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், கார்த்திகை மாதம், ௧ம் தேதியிலிருந்து, தை மாதம் வரை, அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

நேற்று (நவம்., 18ல்), அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின், சிறப்பு அலங்காரத்தில் அய்யப்பன் எழுந்தருளினார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !