உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகை சோமவார வழிபாடு: சிவாலயங்களில் சங்காபிஷேகம்

கார்த்திகை சோமவார வழிபாடு: சிவாலயங்களில் சங்காபிஷேகம்

திருப்பூர்: கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை (திங்கள்) முன்னிட்டு, பல சிவாலயங்களில், 108 சங்காபிஷேக பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில், சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம்.அவ்வகையில், அவிநாசி லிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், நல்லுார் விஸ்வேஸ்வரர் சுவாமி கோவில் உட்பட, திருப்பூரில் உள்ள, சிவாலயங்களில் நேற்று, 108 சங்காபிஷேக பூஜைகள் நடந்தன.கோவில் மகா மண்டபத்தில், லிங்க வடிவத்தில் வலம்புரி சங்குகளை வைத்து, தீர்த்தம் நிரப்பி, பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. சிவாச்சாரியார்கள், திருமுறை, பெரியபுராணம் பாராயணம் செய்து, சிவபெருமானுக்கு வழிபாடு நடத்தினர்.சங்கு பூஜை நிகழ்வை தொடர்ந்து, சங்கு தீர்த்தம் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அலங்காரபூஜையை தொடர்ந்து, பக்தர்களுக்கு சங்கு தீர்த்தம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !