உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலையில் தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாதம்! மண் விளக்குகள் விற்பனை ஜோர்

உடுமலையில் தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாதம்! மண் விளக்குகள் விற்பனை ஜோர்

உடுமலை:திருக்கார்த்திகை தீப விழாவிற்காக, மண் விளக்குகள் விற்பனை களை கட்டியுள்ளது; இந்தாண்டு புதிதாக, பிள்ளையார் சிலையுடன் கூடிய, ஐந்து முக விளக்கு விற்பனைக்கு வந்துள்ளது.தீப ஒளி திருநாளாம், திருக்கார்த்திகை தீபம் வரும், 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், கோவில்களில், மண் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவதுபாரம்பரியமாக நடந்து வருகிறது.

திருக்கார்த்திகைக்கு தேவையான தீபங்கள், உடுமலை, புக்குளம், பூளவாடி, பள்ளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தயார் செய்யபட்டு விற்பனைக்கு வருகிறது.திருக்கார்த்திகைக்கு இரு
நாட்களே உள்ள நிலையில், மண் விளக்குகள் விற்பனை களை கட்டியுள்ளது. உடுமலை சந்தை ரோட்டில் மண் விளக்குகள் விற்பனை கடைகள் அதிகளவு அமைக்கப்பட்டுள்ளன. சிறிய சுட்டி விளக்குகள், டஜன் 12 ரூபாய்க்கும், பெரிய விளக்குகள் ரகத்திற்கு ஏற்ப, 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

கோவில்களுக்கும், தீப கம்பங்களுக்கும், ஒரு லிட்டர் முதல் ஐந்து லிட்டர் கொள்ளளவு கொண்ட விளக்குகளும் விற்பனைக்கு வந்துள்ளன. பெரிய விளக்குகள், 150 ரூபாய் வரை
விற்கிறது.இந்தாண்டு, புதிதாக விநாயர் சிலையுடன் கூடிய, ஐந்து முக மண் விளக்கு விற்பனைக்கு வந்துள்ளது. முழுவதும் மண்ணால் செய்யப்பட்டு, இயற்கை சாயம் பூசப்பட்டுள்ளது.

இந்த விளக்கு, 50 முதல் நூறு ரூபாய் வரை விற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வலமாக வாங்கி செல்கின்றனர்.வியாபாரிகள் கூறுகையில், மண் விளக்கில் தீபம் ஏற்றுவது பாரம்பரிய
முறையாகவும்; சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வழிபாட்டு முறையாகும். இதனால், மண் விளக்குகளில் தீபம் ஏற்றும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. அதனால், கார்த்திகை தீப விளக்குகள் விற்பனையும், கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஒரு லட்சம் மண் விளக்குகள் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !