திருக்கோவிலூர் ஞானானந்தா நிகேதனில் 25ம் தேதி திருவாசகம் முற்றோதல்
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர்‚ தபோவனம்‚ ஸ்ரீ ஞானானந்த நிகேதனில் வரும் 25ம் தேதி காலை 9:00 மணிக்கு துவங்கி‚ மாலை 5:00 மணிவரை‚ திருவாசகம் முற்றோதல் ஞானப் பெருவேள்வி நடக்கிறது.நித்யானந்தகிரி சுவாமிகள் தலைமை தாங்கி‚ திருவாசக முற்றோதலை துவக்கி வைக்கிறார்.
தேனி ஓங்காராநந்த சுவாமிகள்‚ மதுரை சமாநந்த சரஸ்வதி சுவாமிகள்‚ தபோவனம் சதா சிவகிரி சுவாமிகள்‚ சுவாமினீ பிரபவானந்த சரஸ்வதி சுவாமிகள்‚ சுவாமினீ ஆத்மதத்வானந்த சரஸ்வதி சுவாமிகள்‚ அம்ருதேச்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் முன்னிலை வகிக்கின்றனர்.
திருச்சி அய்யப்ப நகர் சேக்கிழார் மன்றம்‚ திருவாதவூரார் திருவாசகம் முற்றோதல் குழு‚ மணப்பாறை திருவாசகம் அன்பர் குழு‚ கிழக்கு தாம்பரம் கற்பக விநாயகர் திருநெறி மன்றம்‚ கீழ் விஷாரம் அப்பர் சுவாமிகள் மடம் தேவார பயிற்சி மைய மாணவர்கள்‚ கண்டாச்சிபுரம் திருவாசகம் முற்றோதல் குழுவினர்
இதில் கலந்து கொள்கின்றனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஞானானந்த நிகேதன் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.