பிரசாதம் இது பிரமாதம்: கடலைப்பருப்பு பாயாசம்
என்ன தேவை
அரிசி –100 கிராம்
கடலைப்பருப்பு –150 கிராம்
தூள் செய்த வெல்லம் – 250 கிராம்
தேங்காய் –1/4 மூடி
பால் – 1/4 லிட்டர்
ஏலக்காய் – 3
நெய் –2 டேபிள் ஸ்பூன்
எப்படி செய்வது: அரிசி, கடலைப்பருப்பு இரண்டையும் தண்ணீரில் களைந்து வடித்த பின் நிழலில் உலர்த்தவும். தேங்காயைத் துருவி வைத்து கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு, நிதானமாக எரியும் அடுப்பில் வைத்து, நெய் காய்ந்தபின் முதலில் தேங்காய்த் துருவலைப் பொன்னிறமாக வறுக்கவும். அரிசி, பருப்பை சற்று கூடுதலாக வறுத்தெடுக்கவும். ஏலக்காயைப் பொடி செய்யவும். களிம்பேறாத பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அடுப்பில் ஏற்றி கொதிக்கும்போது அரிசி பருப்பைப் போட்டு நன்றாக வேக வைக்கவும். பின் வெல்லத் தூளைச் சேர்த்து கொதி வந்தபின், பால், ஏலக்காய்ப்பொடி, வறுத்த தேங்காய்த் துருவலைப் சேர்த்தால் கடலைப்பருப்பு பாயாசம் ரெடி