உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிள்ளை அடுத்த குமாரமங்கலம் பகுதியில் கார்த்திகை தீபத்திற்கு விளக்கு உற்பத்தி தீவிரம்

கிள்ளை அடுத்த குமாரமங்கலம் பகுதியில் கார்த்திகை தீபத்திற்கு விளக்கு உற்பத்தி தீவிரம்

கிள்ளை: கிள்ளை அடுத்த குமாரமங்கலம் பகுதியில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்கு உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.கிள்ளை அடுத்த குமாரமங்கலம்,
வடக்குசாவடி, குயன்பேட்டை உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் உள்ள மண்பாண்ட தொழிலாளர் கள் கார்த்திகை தங்களுக்கு எதிர்பார்த்த வருவாய் இல்லா விட்டாலும் தொழிலை கைவிடாமல் செய்து வருகின்றனர். தற்போது கார்த்திகை தீபத்தையொட்டி, மண் அகல் விளக்கு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து அகல் விளக்கு செய்யும் ரங்கநாதன் கூறுகையில், ஆண்டுதோறும் மழையில் பாதிக்கப்படுகிறோம், வருவாய்த்துறை கோடை காலங்களில் மண் எடுக்க தடை விதிப்பதால் தொழில் நலிவடைகிறது. இருப்பிலும் மூதாதையர் கள் செய்த தொழிலை விட மனம் இல்லை, அரசு எங்களுக்கு எந்த உதவியும்
செய்யவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !