உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை தீபத்திற்கு 50 ஆயிரம் லட்டு தயாரிப்பு

திருவண்ணாமலை தீபத்திற்கு 50 ஆயிரம் லட்டு தயாரிப்பு

விழுப்புரம்: திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்ய 50 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி நடந்து வருகின்றது.விழுப்புரம் அடுத்த வளவனுார் குமாரக்குப்பம் அண்ணாமலையார் மகா தீப திருவிழா குழு சார்பில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்ய லட்டு தயாரிக்கும் பணி நேற்று துவங்கியது.வளவனுார் குமாரக்குப்பம் மகா சித்தர் கோவில், 250 கிலோ கடலை மாவு பயன்படுத்தி 50 ஆயிரம் லட்டுக்கள் தயாரிக்கப்படுகிறது. விழாக்குழு நிர்வாகிகள் உதயகுமார், ராமு, ஆறுமுகம், கோபால், மாணிக்கம் ஆகியோர் தலைமையில் 50 பேர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !