திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் ஜீயர் பிரம்மரத வீதியுலா
ADDED :2548 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் ஜீயர் சுவாமிகள் பிரம்மரதம் ஏறும் வைபவம் நடந்தது.திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில்‚
கைசிக ஏகாதசியை முன்னிட்டு‚ ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச் சாரிய சுவாமிகள்‚ பிரம்மரதம் ஏறும் வைபவம் நேற்று (நவம்., 20ல்) நடந்தது. கடந்த 19ம் தேதி காலை 8:00 மணிக்கு‚ பஞ்ச சமஸ்கார வைபவம்‚ உபன்யாசம்‚ தொடர்ந்து பக்தர்களுக்கு தீட்சை அளிக்கும் வைபவம் நடந்தது.
மாலை 3:00 மணிக்கு‚ உபன்யாசம்‚ இரவு 7:00 மணிக்கு‚ ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் வீதியுலா நடந்தது. நேற்று (நவம்., 20ல்)அதிகாலை 5:00 மணிக்கு‚ ஜீயர் சுவாமிகள்‚ பெருமாள் சன்னதியில் கைசிக புராணத்தை வாசித்தார். இரவு 7:00 மணிக்கு‚ பிரம்ம ரதம் ஏறும் வைபவம் நடந்தது. பக்தர்களின் பஜனை பாடல்களுக்கிடையே ஜீயர் பிரம்மரதத்தில் வீதியுலா நடந்தது.