விழுப்புரம் வைகுண்டவாசருக்கு கவுசிக ஏகாதசி உற்சவம்
ADDED :2548 days ago
விழுப்புரம்: விழுப்புரம் ஜனகவள்ளி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் கவுசிக ஏகாதசி உற்சவம் நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் (நவம்., 19ல்) மாலை 6.00 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவ ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.