அழகர்மலையில் நாளை (நவம்., 22ல்) தீபகுண்டம்
ADDED :2549 days ago
அலங்காநல்லூர்:அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயில் திருகார்த்திகை தீபத்திருவிழா நாளை (நவம்., 22ல்) நடக்கிறது.
இதையொட்டி கோயில் முழுவதும் விளக்குகள் ஏற்றப்படும். அப்போது ஸ்ரீதேவி, பூமிதேவி, சமேத சுந்தரராஜபெருமாளுக்கு விசேஷ பூஜை, தீபாராதனை நடக்கும். அன்று மாலையில்
அழகர்மலை உச்சியில் உள்ள வெள்ளிமலை கோம்பை தளத்தில், திருகார்த்திகைநெய் தீபகுண்டம் ஏற்றப்படும்.
தீப குண்டத்திற்காக பக்தர்களிடமிருந்து நெய் பொட்டலங்கள் வரவேற்கப்படுகிறது. சோலை மலை முருகன் கோயிலில் நவ.,23 மாலை தீபங்கள் ஏற்றப்படும். தொடர்ந்து ராஜகோபுரம் முன்பாக சுப்பிரமணிசுவாமி எழுந்தருளுவார். பின் மேளதாளம் முழங்க சொக்கப்பனை கொளுத்தப்படும்.
அன்று வள்ளி, தெய்வானை, சமேத சுவாமிக்கு விசேஷ பூஜை, தீபாராதனை நடக்கும். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து செய்து வருகின்றனர்.