வால்பாறை கோவில்களில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
வால்பாறை: வால்பாறையில் உள்ள பல்வேறு கோவில்களில், சித்திரை மாத திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.
வால்பாறை அடுத்துள்ளது ரொட்டிக்கடை முனீஸ்வரன், நாகாத்தாள், மாரியம்மன், கருப்பண்ணசுவாமி கோவிலின், 47ம் ஆண்டு திருவிழா கடந்த, 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் வரும், 30ம் தேதி காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 7:00 மணிக்கு அபிஷேக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு விநாயர் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். இரவு, 8:00 மணிக்கு சக்தி கும்பம் எடுத்தல் நடக்கிறது.
வரும் மே 1ம் தேதி காலை, 7:00 மணிக்கு சக்தி விநாயர் கோவிலில் இருந்து பக்தர்கள் அலகுபூட்டி, முளைப்பாரி, பூவோடு எடுத்தும், அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். காலை, 10:30 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மதுரைவீரன் கோவில் வால்பாறை நகர் கக்கன்காலனி மதுரைவீரன், தொட்டிமுனி திருக்கோவிலின், 76ம் ஆண்டு திருவிழா கடந்த, 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை மாலை, 4:00 மணிக்கு பல்வேறு கோவில்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தம், கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்படுகிறது. இரவு 8:30 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து சக்தி கும்பம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக செல்கின்றனர். 29ம் தேதி காலை, 9:30 மணிக்கு மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று மதியம், 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது.
பிடாரியம்மன் கோவில் நடுமலை பிடாரியம்மன் கோவிலின், மூன்றாம் ஆண்டு திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேறறத்துடன் துவங்கியது. வரும், 30ம் தேதி காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அதனை தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து, கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். நள்ளிரவு, 12:00 மணிக்கு பிடாரியம்மனுக்கு சிறப்புபூஜைகள் நடக்கிறது. வரும் மே 1ம் தேதி காலை, 11:00 மணிக்கு பக்தர்கள் பூவோடு மற்றும் மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்று மதியம், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.