உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாசவி அம்மன் ஜெயந்தி விழா சங்காபிஷேகத்துடன் துவக்கம்

வாசவி அம்மன் ஜெயந்தி விழா சங்காபிஷேகத்துடன் துவக்கம்

புவனகிரி: புவனகிரி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் ஜெயந்தி விழா, சங்காபிஷேகத் துடன் நடந்தது. புவனகிரி ஆரிய வைசிய சமூகம் சார்பில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், அம்மன் ஜெயந்தி விழா ஆண்டுதோறும், விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு விழாவை முன்னிட்டு நேற்று காலையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களுடன் பூஜை துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு, 108 சங்காபிஷேகம் நடந்தது. பல்வேறு நறுமணத்துடன் கூடிய திட, திரவிய பொருட்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு ஆராதனை நிகழ்ச்சியும் நடந்தது. இதில் தம்பதியர் பெருமளவில் பங்கேற்று பூஜை செய்து கொண்டனர். அன்னதான அறுசுவை விருந்து நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஆரிய வைசிய சமூக தலைவர் சுந்தரேசன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். பூஜைகளை ரஜினி ஐயர் குழுவினர் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !