உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுகுளத்தூர் வாழவந்த அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

முதுகுளத்தூர் வாழவந்த அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே விளங்குளத்தூர் கிராமத்தில் வாழவந்த அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.இதனை முன்னிட்டு கணபதி ஹோமம் துவங்கி விக்னேஸ்வர பூஜை,அனுக்ஞை,வாஸ்து சாந்தி, பிரவேச பலி,தனபூஜை,முதல்கால யாக பூஜைகள்,மூல மந்திரங்கள் பூர்ணாஹூதி நடந்தது.நேற்று காலை 9:00 மணிக்கு கோபூஜை,லட்சுமி பூஜை,இரண்டாம்கால யாகபூஜை, பூர்ணாஹூதி,கலச புறப்பாடுக்கு பிறகு சிவாச்சாரியார்கள் தலைமையில் கும்பநீர் ஊற்றப்பட்டது.பின்பு வாழவந்த அம்மன்,கருப்பண்ணசாமி, பரிவார மூர்த்திகளுக்கு பால்,சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம்,தீபாரதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு வள்ளி திருமணம் நாடகம் நடந்தது. விழாவில் முதுகுளத்தூர் சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !