உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி சித்திரை திருவிழாவில் அம்மன் தபசு திருக்கோலம்

பரமக்குடி சித்திரை திருவிழாவில் அம்மன் தபசு திருக்கோலம்

பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரை திருவிழாவில் விசாலாட்சி அம்மன் தபசு திருக்கோலத்தில் அருள்பாலித்தார்.


விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா ஏப்., 20 துவங்கி நடக்கிறது. நேற்று இரவு திக்கு விஜயம் நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு விசாலாட்சி அம்மன் கமல வாகனத்தில் தபசு திருக்கோலத்துடன் அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு சந்திரசேகர சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் 7:00 மணிக்கு சுவாமி, அம்பாளுடன் கோயிலை அடைந்தார். தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு விசாலாட்சி சயன திருக்கோலத்தில் புறப்படாகினார். இன்று காலை திருக்கல்யாண விழா 10:45 மணிக்கு கோலாகலமாக நடக்கிறது. *இதேபோல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழாவில் திருக்கல்யாண உற்சவம் மாலை 6:00 மணிக்கு நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !