திருவண்ணாமலைக்கு, தீபத்திருவிழாவிற்கு 60 சிறப்பு பஸ்கள்
ADDED :2549 days ago
தர்மபுரி : தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பவுர்ணமி பூஜை, கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு, பக்தர்கள் செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, நாளை (நவம்., 22), நாளை மறுதினம் (நவம்., 23) ஆகிய இரண்டு நாட்கள், தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் இருந்து, திப்பம்பட்டி கூட்டுரோடு, புலியூர் பிரிவு, ஊத்தங்கரை வழியாக
திருவண்ணாமலைக்கு, 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதை, பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.