உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம், கோட்டை, அழகிரிநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி முகூர்த்தக்கால் நடல்

சேலம், கோட்டை, அழகிரிநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி முகூர்த்தக்கால் நடல்

சேலம்: சேலம், கோட்டை, அழகிரிநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு, டிச., 18ல் நடக்கிறது. அதற்கு முன், டிச., 8ல், பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா, கோவில் வளாகத்தில், நேற்று (நவம்., 22ல்)நடந்தது. அதையொட்டி, கோட்டை பெருமாள், சுந்தரவள்ளி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. பின், பூஜை செய்து, முகூர்த்தக்கால் நடப்பட்டது. தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சக்திவேல், செயல் அலுவலர் குமரவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !