உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை அடுத்த, திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல தடை

உடுமலை அடுத்த, திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல தடை

உடுமலை:உடுமலை அடுத்த, திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மலை வழித்தடத்தில் வெள்ள நீர் ஓடியது. இதனால், கடந்த, 15ம் தேதி முதல் அருவிக்கு, சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஒரு வாரமாக தடை நீடித்த நிலையில், மழை குறைந்ததால், நேற்று முன்தினம் (நவம்., 21ல்) அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று (நவம்., 22ல்) காலை முதலே, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், தொடர்ந்து மழை பெய்தது வந்தது. மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளிலும் மழை பெய்து, அருவிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு நேற்று (நவம்., 22ல்) தடை விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !