கூடலூர் சிவன் மலையில் மகா தீபம்: திரளான பக்தர்கள் தரிசனம்
ADDED :2543 days ago
கூடலூர்:கூடலூர் நம்பாலகோட்டை சிவன் மலையில், ஏற்றப்பட்ட மகா கார்த்திகை தீபத்தை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.கூடலூர் நம்பாலகோட்டை சிவன்மலை, சிவன் கோவிலில் மகா கார்த்திகை தீப திருவிழா நடந்தது.
மாலை, 4:00 மணிக்கு கிரிவல ஊர்வலம் துவங்கியது.மாலை, 6:00 மணிக்கு கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஊட்டி கோசோலை குருசுயம் ஜோதி சுவாசிகள் மகா தீபத்தை ஏற்றினார்.
கூடியிருந்த பக்தர்கள் தீபத்தை வணங்கி தரிசனம் செய்தனர். தங்காடு மோகன் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது.இதற்கான ஏற்பாடுகளை, சிவன்மலை வளர்ச்சி சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.