உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலில் இலவச திருமணம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கோவிலில் இலவச திருமணம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருப்போரூர் :திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், இலவச திருமணங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பில், 1,006 திருமணங்கள் நடைபெற உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், மாநில அறநிலையத் துறை சார்பில், அனைத்து கோவில்களிலும் கிடைக்கிறது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலிலும், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களின் வயது சான்று, குடும்ப அட்டை நகல், புகைப்படம், ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பதாரருக்கு, இந்து அறநிலைத் துறை சார்பில் தேர்வாகும் கோவிலில், திருமணம் நடைபெறும். இவ்வாய்ப்பை ஏழை, எளியோர் பயன்படுத்திக் கொள்ளலாம் என, திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !