உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுவீரப்பட்டு சொக்கநாதர் கோவிலில் கார்த்திகை தீப விழா

நடுவீரப்பட்டு சொக்கநாதர் கோவிலில் கார்த்திகை தீப விழா

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் சொக்கநாதர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்தது. சி.என்.பாளையம் மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, நேற்று (நவம்., 23ல்) மாலை 4:00 மணிக்கு விநாயகர், மீனாட்சி அம்மன், சொக்கநாதர், வள்ளி தேவசேனா சுப்ரமணியர் ஆகிய மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 6:00 மணிக்கு கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. சுவாமிகள் ஆலய உலா வந்து கோவில் வெளியில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !